
இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இழுத்டித்து வந்தது.
இந்நிலையில் தீபாவளியையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிறப்பு காட்சிக்கென அரசு அனுமதித்த கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. சிறப்பு காட்சிகளுக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதால் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் சிறப்பு காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து பிகில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.