
பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சி முடிந்து மூன்று வாரங்களுக்கும் மேல் ஆன நிலையில் அந்த இல்லத்தின் மெம்பர்கள் குறித்த செய்திகள் இன்னும் குறைந்தபாடில்லை. அவர் வீட்டுக்கு இவர் போவதும் இவர் வீட்டுக்கு அவர் போவதும் கூட முக்கிய செய்திகளாக ஆக்கப்பட்டு வரும் நிலையில் தனது காதல் மற்றவர்களால் கிண்டலடிக்கப்பட்டது போலியான சந்தர்ப்பவாதக் காதல் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக லாஸ்லியாவை சந்திக்க இலங்கை சென்றுள்ளாராம் கவின்.
சில தினங்களாக ‘வி ஆர் பாய்ஸு’என்ற முழக்கத்துடன் கவின்,சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோர் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றிவருகிறார்கள். இவர்களது அட்ராசிட்டி தாங்கமுடியாமல் நடிகைகள் மீரா மிதுன், கஸ்தூரி ஆகியோர் இவர்களைக் கண்டித்து ட்விட் செய்து வந்தனர். இன்னொரு பக்கம் கவினின் லாஸ்லியா மீதான காதல் பிக்பாஸ் ஸ்கிரிப்டுக்காக ஆடப்பட்ட நாடகம் என்ற விமர்சனங்களும் எழுந்துவந்தன.
இந்நிலையில் வெற்றியாளர் முகேன் மலேசியா பறந்துவிட்ட நிலையில், தர்ஷன், சாண்டி, கவின் ஆகியோர் மட்டும் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவின் மட்டும் மிஸ்ஸிங். இது குறித்து சாண்டியிடம் கேட்டதற்கு கவின் வெறுமனே வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்தார்.மேலும், அவர் திரைப்படம் ஒன்றில் நடிப்பதாகவும், அதன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருப்பதாகவும் சாண்டி கூறினார். ஆனால் அவர் தெரிந்தே ஒரு தகவலை மறைத்திருப்பதாகத் தெரிகிறது.
உண்மையில் கவின் சென்றிருப்பது இலங்கைக்குத் தான் என்றும் லாஸ்லியாவை சந்திக்கச் செல்லும் அவர் அவரது பெற்றோர்களிடம் தங்கள் காதலுக்கு முறைப்படி அனுமதி பெறவே சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கு லாஸ்லியாவின் பெற்றோர்களிடம் காதலுக்கு மரியாதை கிடைக்கிறதா அல்லது விரட்டி அடிக்கப்படுவாரா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.