வசூலில் 'வெறித்தனம்' காட்டும் பிகில்..! தளபதி ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாட்டம்..!

Published : Nov 03, 2019, 12:43 PM IST
வசூலில் 'வெறித்தனம்' காட்டும் பிகில்..! தளபதி ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாட்டம்..!

சுருக்கம்

9 நாட்களில் பிகில் திரைப்படம் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதனால் ரஜினிக்கு பிறகு அதிக முறை ரூ 10 கோடி வசூல் சாதனையில் இணைந்தது விஜய் மட்டும் தான் என்பது கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்திற்கு சிறப்பு காட்சிகள் சம்பந்தமாக அரசு சார்பாக இதுவரையிலும் நெருக்கடி இருந்து வந்த நிலையில் 25ம் தேதி அதிகாலை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு அணியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராயப்பன், மைக்கெல் பிகில் என இரு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார். கில்லியில் கபடியை முன்னிலை படுத்தியது போன்று பிகிலில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தளபதி விஜய் நடித்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படம் வெளியாகுவதற்கு முன்பே 136 .55 கோடி வசூல் செய்த நிலையில் தற்போது 9 நாட்களில் பிகில் திரைப்படம் சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதனால் ரஜினிக்கு பிறகு அதிக முறை ரூ 10 கோடி வசூல் சாதனையில் இணைந்தது விஜய் மட்டும் தான் என்பது கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் பிகில் திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல்படம் என்ற பெருமையை பிகில் படம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கைதி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றிந்தபோதிலும் வசூல் ரீதியாக அந்த படம் பெரிய வெற்றியை அடையவில்லை என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?