
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தைக் கொண்ட மாஸ் நடிகர்கள் என்றால் அது நம்ம அஜித், விஜய் தான். விஜய், அஜித் படத்தோட பெயரை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதில் இருந்து ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அன்னைக்கு தியேட்டரை அலறவைக்கிற வரைக்கும் தல, தளபதி ரசிகர்களை அடிச்சிக்க முடியாது. சின்ன, சின்ன விஷயத்துக்கு கூட டுவிட்டரில் கட்டிப்புரண்டு சண்டை போடுற தல, தளபதி ஃபேன்ஸை குஷியாக்குற மாதிரி ஒரு நியூஸ் வெளியாகியிருக்கு.
சமீபத்தில் தீபாவளி ட்ரீட்டாக அட்லீ - விஜய் கூட்டணியில் வெளிவந்த "பிகில்" திரைப்படம், பொங்கல் விருந்தாக வந்த தல அஜித்தின் "விஸ்வாசம்" படத்தை வசூல் ரீதியாக பின்னுக்குத் தள்ளியது. இதை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய, கடுப்பான அஜித் ரசிகர்கள் வழக்கம் போல சோசியல் மீடியாவில் சண்டை போட ஆரம்பித்தனர். விதவிதமான ஹேஷ்டேக்குகளை வைத்து உச்சம் போன ட்விட்டர் சண்டைக்கு தற்போதைய செய்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க: அங்கமட்டும் வரமாட்டேன்... தொடர்ந்து அடம்பிடிக்கும் நயன்தாரா... "மூக்குத்தி அம்மன்" நியூ அப்டேட்...!
அதாவது விஜய் நடிப்பில் வெளிவந்த "பிகில்" திரைப்படம் தமிழகத்தில் 143 கோடி ரூபாய் வரை வசூல் செய்து, இந்த வருடம் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பிடித்துள்ளது. அதே சமயத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன அஜித்தின் "விஸ்வாசம்" திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் செய்தாலும், விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் கொடுத்த திரைப்படம் என்ற பெருமையை பிடித்துள்ளது. அதனால இந்த வருடம் தல, தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடம் என்பதால், கொஞ்சம் சண்டை போடாமல், என்ஜாய் பண்ணுங்கப்பா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.