
கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், பிரமாண்ட மாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியின் பைனலுக்கு பின், மீண்டும் பிக்பாஸ் உறவுகள் அனைவரும் நடிகை வனிதா வீட்டில் நடந்த விஷேஷத்திற்காக ஒன்று சேர்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிரபல நடிகையும், பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவரின் பெரிய மகள் ஜோவிகா பூப்படைந்ததை முன்னிட்டு மிகவும் எளிமையாக, அவருக்கு தன் வீட்டிலேயே சடங்கு செய்துள்ளார் வனிதா.
வனிதா வீட்டின் முதல் விசேஷமான இதில், அவரின் எந்த ஒரு சொந்த பந்தங்களும் கலந்து கொள்ள வில்லை. மாறாக பிக்பாஸ் வீட்டில் ஒரு சில மாதங்கள், மற்றும் நாட்கள் ஒன்றாக இருந்த பிக்பாஸ் சொந்தங்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.குறிப்பாக லாஸ்லியா, பாத்திமா பாபு, சேரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்:- அடம்பிடித்து அசால்ட் காட்டிய மோடி... கண்கள் பனித்து, இதயம் இனித்த ஷி ஜின்பிங்..!
இதையும் படியுங்கள்:- சீன அதிபர் - மோடி வருகையின் போது சென்னையில் நடந்த பயங்கரம்... குலைநடுங்க வைக்கும் சம்பவத்தை அம்பலப்படுத்திய திமுக..!..
இது குறித்த புகைப்படங்கள் சில வற்றை, வனிதா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வனிதா வீட்டில் நடந்த இந்த விசேஷத்திற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.