
பல இண்டிபென்டென்ட் பாடல்களை பாடி பிரபலமானவர் முகேன் ராவ். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாத இவரை, மக்களுக்கு அறிமுக படுத்திய நிகழ்ச்சி பிக்பாஸ்.
சுமார் 50 , 60 நாட்கள் வரை, அபிராமியின் காதலை தவிர வேறு எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்த இவர், கடைசி சில நாட்களின் மக்களின் மனதில் இடம் பிடிக்க துவங்கினார். மேலும் பிக்பாஸ் தரப்பில், கோல்டன் டிக்கெட் டாஸ்கில் மிகவும் நிதானமாகவும், நேர்மையாகவும் விளையாடி நேரடியாக பைனலுக்குள் நுழைந்தார்.
மேலும் இவருடைய பொறுமை, நியாயமான விஷயங்களுக்காக கோவம் கொள்ளுவது போன்றவை மக்களை ஈர்த்தது. அதே போல் தன்னை காதலிக்காத காதலிக்காக, எந்த ஒரு தருணத்திலும் மனதை அலை பாய விடாமல், இவர் உண்மையாக இருந்ததும், பல ரசிகர்களை பெற்று தந்தது.
இது போன்ற சிறந்த குணத்தால், பிக்பாஸ் டைட்டல் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் முகேன். பிக்பாஸ் டைட்டல் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு ஊடகங்களுக்கு பிசியாக பேட்டி கொடுத்த முகேன், தற்போது மலேசியா சென்றுள்ளார்.
இவர் வரும்போது, மலையேசியே மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து, இவருடன் செல்பி எடுத்து கொள்ள, போட்டி போட்டி வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.