இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லும் போட்டியாளர் இவரா.? கசிந்தது தகவல்..!

Published : Oct 17, 2020, 02:56 PM IST
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லும் போட்டியாளர் இவரா.? கசிந்தது தகவல்..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் இப்போது தான், புது புது பிரச்சனைகள், காதல், சண்டை என கலகலப்பு ஆகியவை கூடி கொண்டே செல்கிறது. எனினும் இந்த வாரம்  போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நீதி.

பிக்பாஸ் வீட்டில் இப்போது தான், புது புது பிரச்சனைகள், காதல், சண்டை என கலகலப்பு ஆகியவை கூடி கொண்டே செல்கிறது. எனினும் இந்த வாரம்  போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நீதி. அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ள நிலையில் இது குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 இந்த வார நாமினேஷனில் சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகியோர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இவர்களில் சனம்ஷெட்டியை மட்டும் 11 பேர் நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அல்லது நாளை இந்த ஏழு பேர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார். மக்களின் வாக்குகளை குறைவாக பெற்று வெளியேறும் போட்டியாளர் யார்? என்பதை அறிய மிகவும் ஆவலுடன் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நடிகை ரேகா தான், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவார் என கூறப்படுகிறது. இவர் சுவாரஸ்யம் இல்லாத வகையில் விளையாடியதால் இவருக்கு மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. அதே நேரத்தில் அதிக வாக்குகளை ரம்யா பாண்டியன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!