இந்த பூமியின் மிக அழகான பெண்ணே... ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

By manimegalai aFirst Published Mar 6, 2021, 4:25 PM IST
Highlights

மிதமான கவர்ச்சியில் கருப்பு நிற உடையில் ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

தன்னுடைய 17 வயதிலேயே சீரியல் ஹீரோயினாக விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமாகி, கலக்கியவர் ஷிவானி. இவர் நடித்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரையில் சேலை கட்டிய குயிலாக வலம் வந்த ஷிவானி, திடீர் என மாடர்ன் உடைக்கு மாறி, இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சியால் தீ மூட்டினார். தற்போது மிதமான கவர்ச்சியில் கருப்பு நிற உடையில் ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

 

மேலும் செய்திகள்: வருமான வரி சோதனையில் அதிகாரிகள் கொண்டு சென்றது இதை தான்..! ஷாக் கொடுத்த டாப்ஸி..!
 

சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு, காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், நாசுக்காக அதில் இருந்து நகர்ந்தார்.

மேலும் செய்திகள்: மீண்டும் துவங்கங்குறது அண்ணாத்த படப்பிடிப்பு..! எங்கு... எப்போது தெரியுமா..?
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே, சரியாக 4 மணி ஆகிவிட்டால்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், சில நாட்கள் எந்த புகைப்படமும் வெளியிடாமல் இருந்த ஷிவானி, ரசிகர்களின் அன்பு கோரிக்கையை ஏற்று கொண்டு, மீண்டும் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

மேலும் செய்திகள்: இந்த கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க..! வரலட்சுமி சரத்குமாரின் பளார் பதில்!
 

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி, நேற்று ஜொலிஜொலிக்கும்  கருப்பு நிற உடையில் அட்டகாச அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

இந்த பூமியில் மிக அழகான பெண் ஷிவானி, வேற லெவல் தலைவி, செம்ம ஹாட்,  என...  நெட்டிசன்கள் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!