
வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யாப், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான டாப்ஸி மற்றும் தயாரிப்பாளர்கள் விகாஷ் பெஹல், மது மான்டெனா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஒரு சில தினங்களுக்கு முன் ஒரே நேரத்தில் மும்பை மற்றும் புனே, டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும். நடிகை டாப்ஸி ஃபேண்டம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ரூ.5 கோடியை ரொக்கமாக வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அனுராக் காஷ்யாப், டாப்ஸிடம் தனித்தனியே விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்: தம்மாத்தூண்டு டவுசர் போட்டு இளசுகளை இம்சித்த பூனம் பாஜ்வா... கவர்ச்சியில் கரை தாண்டிய ஹாட் கிளிக்ஸ்...!
இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து கருத்து தெரிவித்த நடிகை டாப்ஸி, ‘வருமான வரி சோதனை குறித்து எனக்கு எந்தவித கவலையும் இல்லை. எனக்கு சொந்தமாக பாரிஸீல் உள்ள வீட்டுக்கான சாவிகள் மற்றும் தான் நிராகரித்த 5 கோடி ரூபாய் காசோலையை மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். மற்றபடி தனிப்பட்ட விதத்தில் தனக்கு எந்த பாதிப்பையும் இந்த சோதனை தனக்கு ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: இந்த கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க..! வரலட்சுமி சரத்குமாரின் பளார் பதில்!
பரபரப்பாக நடந்து முடிந்த வருமானவரி சோதனை குறித்து, மிகவும் கூலாக, டாப்ஸி அளித்துள்ள பதில்... ரசிகர்களையே ஷாக் ஆகச்செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.