TTF-க்கே போட்டியா..? ஹாயாக கைவிட்டு பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ரச்சிதா - வைரலாகும் வீடியோ

Published : Feb 16, 2023, 03:41 PM IST
TTF-க்கே போட்டியா..? ஹாயாக கைவிட்டு பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் ரச்சிதா - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, கைவிட்டு பைக் ஓட்டிய வீடியோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. மக்கள் மனதில் மீனாட்சி என பெயர் பதியும் அளவுக்கு இவரது கேரக்டர் செம்ம ரீச் ஆனது. இதையடுத்து சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரச்சிதா, கடந்த சில ஆண்டுகளாக அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் அவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவத் தொடங்கின.

இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் ரச்சிதா. அதிலும் ராபர்ட் மாஸ்டர் இவரது துரத்தி துரத்தி காதலித்தது பேசுபொருள் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கான ரசிகர் பட்டாளமும் பெரிதானது. சமீபத்தில் ரச்சிதா தனது ரசிகர்களுக்காக பிரியாணி சமைத்துக் கொடுத்து விருந்து வைத்த வீடியோ வெளியாகி வைரலானது.

இதையும் படியுங்கள்... 'ராஜா ராணி 2' சீரியலில் புது சந்தியாவாக களமிறங்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில், தற்போது ராயல் என்பீல்டு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் ரச்சிதா. அதைப்பார்த்த ரசிகர்கள் மாஸாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தாலும், சிலர் அவர் கைவிட்டு பைக் ஓட்டியதை சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுவது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால் இப்படி பைக் ஓட்டுவதை தவிர்க்குமாறு ரச்சிதாவுக்கு சிலர் அறிவுரையும் கூறி வருகின்றனர். சிலரோ பல்வேறு பைக் சாகசங்களை செய்து யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் TTF-க்கே போட்டியா என ரச்சிதாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரச்சிதா கைவிட்டு பைக் ஓட்டும் வீடியோ தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஆளவிடுங்கடா சாமி... ஐட்டம் சாங்கிற்கு ஆட அழைத்த புஷ்பா 2 படக்குழு... நோ சொல்லி திருப்பி அனுப்பிய சமந்தா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!