31 நாள் மட்டுமே உள்ளது..! உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றப் போகிறது..? வெளியானது முதல் புரோமோ..!

Published : Dec 19, 2020, 01:14 PM IST
31 நாள் மட்டுமே உள்ளது..! உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றப் போகிறது..? வெளியானது முதல் புரோமோ..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 76ஆவது நாளை எட்டியுள்ளது. பிரச்சனைகள் பொறி பறக்கும் டாஸ்க் மூலம், நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரித்து வரும் பிக்பாஸ் இதன் மூலம் அன்பு குரூபையே சுக்கு நூறாகவும் தகர்த்துள்ளார். இந்நிலையில் இன்று, வெளியாகியுள்ள புரோமோவில், எப்போதும் போல் பொடி வைத்து பேசாமல்... வெளிப்படையாக பேசி சட்டையை சுழட்ட தயாராகி விட்டார் கமல் என்பது தெரிகிறது.  

அந்த வகையில் சற்றுமுன் வெளியான புரோமோவில்,  ’இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருக்கின்றன ஒரு வெற்றியாளரை நீங்கள் தேர்ந்தெடுக்க. இந்த வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் விளையாட்டுகளை நேர்மையாக விளையாடுகிறார்களா? என்பதை உங்கள் பிரதிநிதி ஆகிய நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.உங்கள் தேர்வின் சாயல்கள் இந்த வாரம் முதலே தெரிய ஆரம்பித்து விட்டதாக எனக்கு தோன்றுகிறது. உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றப் போகிறது என்பதை பார்க்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

கமலின் இந்த பேச்சில், கிட்ட தட்ட மக்கள் யார் வெற்றியாளராக வர வேண்டும் என்பதை கணித்து விட்டதாகவே பார்க்க முடிகிறது. எனினும் இன்றைய நிகழ்ச்சியில் யார் யார்? கமலிடம் சிக்கி திட்டுவாங்குவார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்