அஜித் பேச்சுக்கு மதிப்பே இல்லையா?... திடீரென ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ValimaiMotionPoster... காரணம் என்ன?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 18, 2020, 08:27 PM IST
அஜித் பேச்சுக்கு மதிப்பே இல்லையா?... திடீரென ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ValimaiMotionPoster... காரணம் என்ன?

சுருக்கம்

இதனிடையே, தற்போது அஜித் ரசிகர்கள்  ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து, அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் வலிமைப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை பட வெற்றிக்குப் பிறகு தல அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்ததோடு சரி, அதன் பின்னர் வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட்டையும் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடவில்லை.  ஏன்? கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட மாஸ்டர் டீசர், சிவகார்த்திகேயன் பட போஸ்டர், சிம்பு பட போஸ்டர், தனுஷ் ஜகமே தந்திரம் படத்திலிருந்து பாடல் என விதவிதமாக வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு ட்ரெண்டானது. ஆனால் தல அஜித் ரசிகர்களோ வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட் வரவில்லையே என காண்டில் சுற்றினர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு... படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” என கூறியிருந்தார்.


 இருந்தாலும் தல அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்பதை நிறுத்துவதாக தெரியவில்லை. இன்னும் 20 சதவீத காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், வலிமை படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சமீபத்தில் ஐதராபாத் ஷெட்டியூலை முடித்த படக்குழு விரைவில் அடுத்தக்கட்ட பணியை தொடங்க உள்ளதாம். அதன் பின்னர் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் எல்லாம் இருப்பதால், தல ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவருடைய பிறந்தநாளிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனிடையே, தற்போது அஜித் ரசிகர்கள்  ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து, அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் வலிமைப் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தநிலையில், அஜித் ரசிகர்கள் இப்படி ட்ரெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!