தயவு செஞ்சி ஹெல்ப் பண்ணுங்க..! காரில் அமர்ந்தபடி பாவனி காதலர் அமீர் வெளியிட்ட வீடியோ..!

By manimegalai a  |  First Published Sep 5, 2023, 8:05 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடன இயக்குனர் அமீர் தற்போது உதவி வேண்டி, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
 


விஜய் டிவியில் ஜோடி, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக பணியாற்றியதன் மூலம் பிரபலமான, அமீர்... பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த இவரின், வாழ்க்கையும் மிகவும் சோகங்கள் நிறைந்தது. மேலும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஒரே வாரத்தில் தன்னை விட வயது மூத்த பெண்ணான, சீரியல் நடிகை பாவனியை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். உள்ளே இருக்கும் போது இருவரும் காதலில் இணையவில்லை என்றாலும், தற்போது இவர்களின் காதல் திருமணத்தில் வந்து நிற்கிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

ரஜினி போட்ட ஆர்டர்? 100 குழந்தைகள் ஆபரேஷனுக்கு 1கோடி வழங்கிய கலாநிதிமாறன் மனைவி! குவியும் வாழ்த்து!

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதவி செய்யுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார். கடந்த சில வருடங்களாக இரண்டு மாணவர்களின் கல்விச் செலவுக்கு...  உதவி செய்து வந்ததாகவும், தன்னால் முழுமையாக உதவி செய்ய முடியாததால் வேறு ஒரு சோர்ஸ் மூலம் உதவி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த சோர்ஸ் தன்னால் உதவ முடியவில்லை என, கூறி விட்டதால் அந்த இரு மாணவர்களின் கல்வி, தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் விஜயகுமார் வீட்டு வாரிசு? 3 பிரபலம் பற்றி கசிந்த தகவல்

இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் விருப்பப்பட்டால் அந்த மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த இரண்டு மாணவர்களும் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் நன்றாக படிப்பதை பார்த்து, பள்ளி நிர்வாகமே குறிப்பிட்ட தொகையை குறைத்து கொண்டுள்ளனர். ஆனால் அந்த தொகையை கூட, அந்த மாணவர்களின் பெற்றோர்களால் கட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்பம் என தெரிவித்துள்ளார். மேலும் உதவ விருப்பம் உள்ளவர்கள் தன்னை அணுகுமாரும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து சிலர்... உதவும் மனப்பான்மையுடன் அமீரை அணுகி வருவதாக கூறப்படுகிறது.

 

click me!