
பிக்பாஸ் அல்டிமேட் :
சிம்பு தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் சீசனில் இருந்து 5 வது சீசன் வரை கலந்து கொண்டுள்ளனர். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் வனிதா, அனிதா தாடி பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், சுருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை என அறியப்பட்ட நபர்கள் ஆரம்பத்தில் உள் நுழைந்தனர்.
வைல்ட் கார்ட் என்ட்ரி :
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சுரேஷ் சக்ரவர்த்தி இவருடன் கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வந்தனர். ரம்யா பாண்டியன் இறுதி சுற்றுக்கு சென்றுள்ளார்.
வெளியில் சென்ற போட்டியாளர்கள் :
கமல் விலகியதை அடுத்து வனிதா தன்னை வெளியேற்றுமாறு கதறியபடி தானாகவே வெளியில் சென்றுவிட்டார். இவரை அடுத்து உடல் நிலை கோளாறு ஏற்பட்ட காரணத்தால் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியில் சென்றுவிட்டார்.
பணத்துடன் வெளியேறிய போட்டியாளர் :
முதலில் 3 லட்சதுடன் அல்டிமேட் ஹவுஸுக்குள் வந்த பணப்பெட்டியில் மதிப்பு பின்னர் 15 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதற்கான டாஸ்கில் சுருதி - ஜூலி இருவரும் கடும் போட்டியிட்டனர். பின்னர் சுருதி வெற்றி பெற்று 15 லட்சத்துடன் வெளியேறிவிட்டார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கிய அல்டிமேட் :.
இறுதியாக இருந்த 6 போட்டியாளர்களின் அபிராமி, ஜூலி வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலாஜி உள்ளிட்டோர் மட்டும் டைடலுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கெஸ்டுகளாக ஏற்கனவே வெளியேற்றப்பட்டவர்கள் உள் வந்துள்ள நிலையில், சீசன் 5-ல் இருந்த பிரியங்கா, பாவனி இருவரும் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.