
பிக்பாஸ் அல்டிமேட் :
விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த பிக் பாஸ் அல்மேட் என்கிற பெயரில் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் இதில் முந்தைய போட்டியாளர்கள் 14 பேர் முதலில் கலந்து கொண்டார்.
புதுவரவுகள்:
வனிதா வெளியில் சென்றவுடன் அவரது இடத்தை நிரப்ப சுரேஷ் சக்ரவர்த்தி,கேபிஒய் சதீஷ் வைல்ட் கார்ட் என்ட்ரியா உள்நுழைந்தனர். பின்னர் சுரேஷ் சக்கரவர்த்தியும் வெளியேறியதை அடுத்து விஜய் டிவி புகழ் தீனா, சாண்டி, மற்றும் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...ஹவுஷ்மேட்ஸை ஏலம் எடுக்கும் புது வரவுகள்...அல்டிமேட் சுவாரஸ்யங்கள்..
கமலை அடுத்து சிம்பு :
5 சீசனைகளையும் தொகுத்து வழங்கிவந்த கமல் இந்த அல்டிமேட் ஷோவில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து சிம்பு புதிய தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இவரின் ஸ்டைல் கமல் அளவுக்கு ஈடு கொடுக்கவில்லை என ரசிகர்கள் முதல் போட்டியாளர்கள் வரை புலம்பி வருகின்றனர்.
வித்யாசமான டாஸ்குகள் :
பிக் பாஸ் அல்டிமேட்டில் சுவாரஸ்யம் சேர்ப்பதற்காக பல புதிய டாஸ்குகள் கொடுக்கப்படுகின்றன. அதன்படி சமீபத்தில் எந்த போட்டியாளர் சிறப்பாக பங்கேற்றனர் என்பது குறித்து சாண்டியம், தீனாவும் முடிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது. முன்னதாக கோடியை காப்பாற்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த ஸ்டாஸ்குகளில் சதீஷ் எந்த கவனமும் செலுத்துவதில்லை என புகாரும் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...Sherin hot : கவர்ச்சி உடையில்... பால்வண்ண மேனியின் அழகை கும்முனு காட்டி.! இளசுகளை கம்முனு ஆக்கிய ஷெரின்
சிம்புவின் விசாரணை :
இந்த புகார் குறித்து சிம்பு விசாரிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குற்றவாளி கூண்டில் சதீஷ் நிற்கிறார். அவருக்கு ஆதரவாக சாண்டியும், தீனாவும் எதிர் கட்சி வக்கீலாக ரம்யா பாண்டியன், ஜூலி உள்ளனர் இவர்களின் கமெண்டுகளை கேட்டு சிம்பு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.