பாலாஜி ரியல் தெரியாமல் முழிக்கும் அபிராமி..இன்னுமா அவரை பத்தி தெரியல?..

Kanmani P   | Asianet News
Published : Mar 08, 2022, 04:31 PM ISTUpdated : Mar 08, 2022, 04:42 PM IST
பாலாஜி ரியல் தெரியாமல் முழிக்கும் அபிராமி..இன்னுமா அவரை பத்தி தெரியல?..

சுருக்கம்

ஏற்கனவே பாலாஜி - அபிராமி இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் அபிராமியின் இந்த ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின்  டிஆர்பியை எகிற வைத்த பெருமை பிக் பாஸுக்கே சேரும் என்று சொன்னால் மிகையாகாது. சீரியல்களில் மூழ்கி இருந்த இல்லத்தரசிகளே மட்டுமல்லாமல் இளைங்கர்களையும் கவர்ந்த நிகழ்ச்சி இது.   பிறர் வீட்டிற்குள் நடப்பதை காண்பதில் நமக்கு தான் என்ன குஷி . அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பி பாஸ் தான். 100 நாட்கள் அந்த வீட்டிற்குள் வெளி தொடர்பின்றி இருக்கும் போட்டியாளர்களின் வாழ்க்கை ஓட்டத்தை பார்ப்பதில் ரசிகர்களுக்குளுக்கு ஒரு சந்தோசம்..

தினமும் 1 மணி நேரம் ஒளிபரப்புவது போதாது என கருதிய ரசிகர்கள் முழு நாளையும் ரசிக்க வேண்டும் என கோரிக்கை விட்டனர் இதையடுத்து ஹிந்தி பிக்பாஸ் போலவே தமிழிலும் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப நிறுவனம் முடிவு செய்ததை தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 வரை ஒளிபரப்பட்ட நிலையில் முந்தைய சீசன்களில் பங்கேற்று பாதியில் வெளியேறிய போட்டியாளர்கள்  இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறக்கப்பட்டுள்ளனர்.  வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, சினேகன், அபிராமி, ஸ்ருதி, தாமரை, பாலாஜி முருகதாஸ், நிரூப் என 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொகுப்பாளராக கமல் இருந்து வந்த நிலையில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை என கூறி கமல் பிக்பாஸிலிருந்து விலகியதை அடுத்து சிம்பு அந்த இடத்தை அலங்கரித்து வருகிறார். இதற்கிடையே அல்டிமேட்டுக்கு விறுவிறுப்பை சேர்த்து வந்த வனிதா கடுப்பாகி தானாக வெளியில் சென்றுவிட்டார். இதன் காரணமாக சுவாரஸ்யம் குறைந்து போனதாக ரசிகர்கள் புலம்பி வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு... முழுசா நயன் காதலானக மாறியுள்ள விக்னேஷ் சிவன்..அப்போ அம்மா பிள்ளை?..

இந்த கேப்பை பில் பண்ண நிறுவனம் புது புது யுத்திகளை கையாள முயன்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்  புது விதமான டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை ஜோடியாக எடுத்துக்கொண்டு அவர்கள் குறித்த கேள்விக்கு சரியாக பதில் அளித்தால் தங்க காசுகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.  இதில் பாலாஜி முருகதாஸுக்கு ஜோடியாகும் அபிராமி வரின் லக்கி நம்பர் தெரியாமல் விழி பிதுங்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலாஜி - அபிராமி இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டது வரும் நிலையில் அபிராமியின் இந்த ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?