Anitha sampath: கெட்ட வார்த்தையில் சரளமாக பேசிய அனிதா...கண்டுகொள்ளத பிக்பாஸ்..வைரலாகும் வீடியோ..!

By Anu KanFirst Published Mar 13, 2022, 11:29 AM IST
Highlights

Anitha sampath: அனிதா சம்பத், நிரூப்பிடம் சரளமாக கெட்டை வார்த்தைகளை பேசி திட்டியுள்ளார் . தற்போது, அந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பிரதர் நிகழ்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் ஹிட்  அடித்தது. இதையடுத்து, தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்  கொண்டிருக்கிறது.  பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களின் மக்களின் அமோக வரவேற்பை தொடர்ந்து,  தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியாக 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படுகிறது. 

Latest Videos

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களையும் கமல் மூலம் தொகுத்து வழங்கப்பட்டது. இதையடுத்து,  பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியையும் முதல் மூன்று வாரம் கமல் வழங்கி வந்த நிலையில், விக்ரம் படம் தொடர்பான பணிகள் இருப்பதாக கூறி நிகச்சியில் இருந்து விலகினார். 

இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சியை கடந்த இரண்டு வரங்களை கடந்து தற்போது, சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. 14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், தற்போது, பிக் பாஸ் வீட்டில் சினேகன், நிரூப், பாலா,சுரேஷ், சதீஷ், அனிதா, தாமரை, ஜூலி, அபிராமி, சுருதி, ரம்யா பாண்டியன் என 11 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில்,தாடி பாலாஜி, ஷாரிக், அபிநய், வனிதா ஆகிய 4 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

புது போட்டியாளர்கள்:

சதீஷ் மற்றும் சுரேஷ் கடந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.. இதையடுத்து, பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரியாக நடிகை ரம்யா பாண்டியன் மூன்று நாட்களுக்கு முன்பு  உள்ளே வந்துள்ளார்.  

இந்த வாரம் வெளியேற்ற பட்டியல்:

இந்த வாரத்திற்கான வெளியேற்ற பட்டியலில்  சினேகன், ஜூலி, சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களிலில் இருந்து கவிஞர் சினேகன் எலிமினேட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமில்லை:

பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை வருவது என்பது, மிகவும் சாதாரமான ஒன்றுதான். ..பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்த வரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவர் வெளியேறிய பிறகு அந்த இடத்தை தற்போது, அனிதா ஒரு படி மேலேயே போய் ஆக்கிரமித்துள்ளார்

மேலும் படிக்க...Valimai Box Office: இரண்டு வாரங்களை கடந்தும் மவுஸு குறையாத அஜித்தின் வலிமை....சென்னையில் மாஸ் காட்டும் வசூல்.!. 

சரளமாக கெட்டை வார்த்தை பேசிய அனிதா சம்பத்:

அனைத்தையும் கால்குலேடிவாக யோசித்து எப்போது, சண்டை போடுவது என்று காத்திருந்த அனிதாவிற்கு, அல்வா  கிடைத்தது போல் நிரூப்பிடம் சரளமாக கெட்டை வார்த்தைகளை பேசி திட்டியுள்ளார் . அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மீம்ஸ் கிரியேட்டர்கள் அந்த வீடியோவிற்கு ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஏமிரா இதி 🤣🤣🤣 pic.twitter.com/px1ChK9qV4

— jaya lakshmi (@coronagaaji)

 

 

click me!