
நடிகர் சங்க தேர்தல் :
தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் ( SIAA ) என அறியப்படுகிறது இது திரைப்படம் , தொலைக்காட்சி மற்றும் மேடை நடிகர்களுக்கான சங்கமாகும். இந்த சங்கத்தில் தலைவராக இருந்த விஜயகாந்த் பதவி விலகியதை அடுத்து 2016-ம் ஆண்டு சரத்குமார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து மூன்று முறை சரத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஷால் டீம் என்ட்ரி :
சரத்குமாரின் ஆட்சியில் முறையான கணக்குகள் காட்டப்படுவதில்லை என்கிற குற்றசாட்டை முன் வைத்து கிளர்ந்தெழுந்த விஷால் தலைமையினா இளைஞர் அணி சரத்குமாருக்கு போட்டியாக காலம் கண்டது. விஷால் செயலாளராகவும் ,நாசர் தலைவியாராகவும், கார்த்தி பொருளாளராகவும், கருணாஸ், பொன்வண்ணன் துணை தலைவர்களாகவும் போட்டியிட்டு அந்த தேர்தலில் வென்றனர்.
பிரமாண்டமாக நடைபெற்ற தேர்தல் :
அரசியல் தேர்தல் போல கலக்கட்டியிருந்தது நடிகர் சங்க தேர்தல். இந்த தேர்தலை முன்னணி மீடியாக்கள் நேரடி ஒளிபரப்பு செய்தனர். துணை நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை ஒரே இடத்தில் பிரபலங்கள் கூடியிருந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய்,சூர்யா என நட்சத்திர குடும்பங்கள் கூடிய இந்த தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் செய்திகளுக்கு.. Nadigar Sangam Election : நடிகர் சங்க தேர்தல்.... விஷால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அடிதடிகிடையே பெற்ற வெற்றி :
நடிகர் சங்க தேர்தலில் சினிமா அளவிற்கு அடிதடியும் அரங்கேறியது. பரப்புரையில் போது விஷால் அணையை தாறுமாறாக ராதிகா, ராதாரவி பகிரங்கமாக விமர்சித்திருந்தனர். அதோடு தேற்றுதல் அன்று வாக்குவாதம் முர்ரா விஷால் கடுமையாக தாக்கப்பட்டார். இதன் விளைவாக விஷால் அணி வென்றது.
சங்க கட்டிடமும்- விஷால் திருமணமும் :
நடிகர் சங்கத்திற்கென மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும் என விஷால் அணி வாக்குறுதி கொடுத்திருந்தனர். அதன் படி பிரபலங்களிடம் நிதி திரட்டப்பட்டு கட்டிடம் காட்டும் பணி ஆண்டுக்கணக்காய் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தில் தான் தனது திருமணம் என சூளுரைத்திருந்தார் விஷால். அதன் படி கடந்த 2019-ம் ஆண்டு விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனுஷாவுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்தம் அப்படியே நிற்கிறது.
இரண்டாம் முறை தேர்தல் களம் :
மூன்று வருடங்களுக்கு பிறகு கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் பாக்கிய ராஜ் அணி விஷால் அணிக்கு எதிராக போட்டியிட்டனர்.பல சர்ச்சைக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் தலையிட்ட நீதிமன்றம் ஓட்டு எண்ணிக்கையை தள்ளி வைத்தது. அதோடு நடிகர் சங்கத்தின் நடவடிக்கைகளை கவனிக்க அரசு அதிகாரியையும் நியமித்தது.
மேலும் செய்திகளுக்கு.. நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு நடிகை ஜெயசித்ரா நிவாரண பொருட்களை வழங்கினார்!
ஓட்டு எண்ணிக்கைக்கு அனுமதி :
மூன்று வருடங்கள் கடந்து விட்டதை அடுத்தது பல முறை விஷால் அணி நீதிமன்ற வாயிலை தொட்டியம் பிரயோசனம் இல்லை. இந்நிலையில் வரும் 20-ம் தேதி நடிகர் சங்க தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.