A. R. Rahman Post: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படம்....குவியும் திருமண நாள் வாழ்த்துக்கள்.!

Anija Kannan   | Asianet News
Published : Mar 12, 2022, 01:04 PM ISTUpdated : Mar 12, 2022, 01:06 PM IST
A. R. Rahman Post: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படம்....குவியும் திருமண நாள் வாழ்த்துக்கள்.!

சுருக்கம்

A. R. Rahman Post: ஏ.ஆர்.ரஹ்மான், தன் மனைவி சைரா பானுவுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்துக்களை மனைவிக்கு, தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான், தன் மனைவி சைரா பானுவுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்துக்களை மனைவிக்கு தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி, இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளா் ஆவார். உலகளவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவருடைய இசையை உலகம் முழுக்க பரவச் செய்தவர்.

ஏ.ஆர்.ரஹ்மான் தொடக்க கால பயணம்:

ஏ.ஆர்.ரஹ்மான், ஆரம்ப காலங்களில் இளையராஜா,எம்.எஸ்.விஸ்வநாதன்,குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோரின் குழுக்களில் இடம்பெற்று அவா்களுடன் பணியாற்றினார். பின்னர், சின்ன சின்ன விளம்பரப் படங்களுக்கு அவ்வப்போது ‘டியூன்’ போட்டுக் கொண்டிருந்தார். அதன்  பிறகு, தனது திறமையை வெளிகாட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மாபெரும் வாய்ப்பு தேடி வந்தது . 

ரோஜா’ படத்தில் முதல் இசையமைப்பாளர்: 

ஆம், 1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசையில் வெளிவந்த ரோஜா திரைப்பட பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அந்த நாட்களில் எங்கு திரும்பினாலும், ரோஜா திரைப்பட பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். இதையடுத்து,  தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன் பிறகு  தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து சாதனை படைத்துள்ளார் ஆஸ்கார் நாயகன். 

மேலும் படிக்க...Vikram movie: இது புது அப்டேட் இல்லை...பழைய அப்டேட்...லோகேஷ் கனகராஜை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இரண்டு ஆஸ்கார் விருது நாயகன்:

 இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் ஆவார். ஜனவரி 23, 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ''Danny Boyle'' மூலம் வெளிவந்த ஹிந்தி திரைப்படமான ''SLUMDOG MILLIONAIRE'' திரைப்படத்திற்கு  இசையமைத்ததற்காக உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்.மேலும், இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 27 வருடங்களுக்கு மேலான இசைப்பயணம்: 

சினிமா திரையில்,  27 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான், பிகில்' படத்தில் வெளிவந்த சிங்கப் பெண்ணே’ பாடல் மூலம் பெண்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார். இவர் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ பாடல் ஆல்பம் இந்தியர்களின் உணர்ச்சி பிணைப்பை ஏற்படுத்திய  குறிப்பிடத்தக்கது. 

ஏ.ஆர்.ரஹ்மான்- சைரா பானு திருணம்:

ஏ.ஆர்.ரஹ்மான், 1997-ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சைரா பானுவை மணந்தார். இவர்களுக்கு, கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் மற்றும் அமீன் ரஹ்மான் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களும்,  இசைத்துறையில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனது 26 வது திருமண நாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவியுடன் இருக்கும் அழகியப் படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ஏ.ஆர்.ரஹ்மான்- சைரா பானு தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!