
பிக்பாஸ் ஷாரிக்:
பிரபல வில்லன் நடிகரான, ரியாஸ் கான் மற்றும் நடிகை உமாவின் மகன் ஷாரிக் ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 2-ல், கலந்து கொண்டுள்ள ஆண்களில் சற்று இளமையான போட்டியாளர் இவர் என்பதால், இவர் ஏதேனும் காதல் சர்ச்சையில் சிக்குவாரா என்று பலர் எதிர்பார்கிறார்கள், இவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபோல் தற்போது மற்ற போட்டியாளர்களால் ஷாரிக்கை சுற்றி சிறு காதல் வலையும் பின்னப்பட்டு வருகிறது.
அறிமுகம்:
ஷாரிக் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'பென்சில்' திரைப்படத்தில், வில்லனாக அறிமுகமானார்.
'பென்சில்' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், தொடர்ந்து இதே போன்ற வில்லன் கதாப்பாத்திரம் அமைந்ததால் ஷாரிக் சில வருடம் நடிப்புக்கு இடைவேளை விட்டார்.
காதல் கிசுகிசு:
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதலர்களாக, உருவாவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருவது ஷாரிக் - ஐஸ்வர்யா ஜோடிதான்.
நிஜ காதலி:
இந்த யூகத்தை பொய்யாக்கும் விதத்தில், ஷாரிக் அவரின் நிஜ காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஷாரிக் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வருவது உறுதியாகியுள்ளது. எனினும் மற்ற காதல் கிசுகிசுவில் இவர் சிக்குவாரா, மாட்டாரா என வரும் வாரங்களில் தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.