அப்போ அதெல்லாம் பொய்யா?..பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிரியங்கா.. என்ன செய்துள்ளார் பாருங்க..

Kanmani P   | Asianet News
Published : Jan 19, 2022, 01:08 PM ISTUpdated : Jan 19, 2022, 01:09 PM IST
அப்போ அதெல்லாம் பொய்யா?..பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிரியங்கா.. என்ன செய்துள்ளார் பாருங்க..

சுருக்கம்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது வெற்றியாளரான பிரியங்கா வெளியே வந்த அடுத்த நாளே நிரூப், அபிஷேக் மற்றும் அபிநய்யுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உ ள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ்  இறுதி வாரத்தில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  இவர்களில் ராஜு பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார்.

பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-வது இடத்தையும் பிடிக்க. அமீர், நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர். என்னதான் ராஜு டைட்டில் வின்னராக இருந்தாலும், இந்த சீசனில் அவரைவிட அதிகம் சம்பளம் பெற்றது பிரியங்கா தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்ததால், இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 16 வாரத்துக்கு ரூ.32 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

வீட்டிற்குள் இருந்தவரை நிரூப் - பிரியங்கா இடையே அவ்வப்போது சண்டை வெடித்த வண்ணமே இருந்தது..சண்டைப்போட்டு வந்தாலும், நிரூப்பை பிரியங்கா எந்த இடத்திலும் விட்டு கொடுத்தது இல்லை. எப்போதும் என் நண்பன், நண்பன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார் பிரியங்கா. அவரின் உண்மையான அன்பை பார்த்து நிரூப்பும் நெகிழ்ந்து நீ அம்மாவைபோல என்று அன்பு பரிசும் அளித்தார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது வெற்றியாளரான பிரியங்கா வெளியே வந்த அடுத்த நாளே நிரூப், அபிஷேக் மற்றும் அபிநய்யுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உ ள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்