சமூகநீதி டூ தமிழ்நாடு வரை..பெஸ்ட் சீசன் இதுதான்; மாஸ் காட்டிய விக்ரமன் - கமலின் தேர்தலுக்கு பிக்பாஸ் உதவுமா?

By Raghupati RFirst Published Jan 20, 2023, 8:44 PM IST
Highlights

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் சீசன் 6 இருக்கிறது என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

உலகம் முழுவதும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் நீண்ட வருடங்களாக நடைபெற்று வருகிறது. தமிழில் கடந்த 5 சீசன்களை கடந்து, தற்போது 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இது தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கல்மஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

விமர்சனங்களுக்கு குறைவில்லாமல் சென்ற இந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் அரசியல் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்பட்டது. ஆனாலும் கமல் உள்ளே வந்த போது வேறு பல விமர்சனங்கள் எழுந்தன. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால்தான் கமல் டிவி பக்கம் வருகிறார் என பலரும் குற்றஞ்சாட்டினர்.

அதுமட்டுமில்லாமல் அரைகுறை ஆடை, ஆபாச வார்த்தை என அடுக்கடுக்காக விஜய் தொலைக்காட்சியின் மீதும், பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும் புகார்கள் எடுக்கப்பட்டது. ஆனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் சீசன் 6 இருக்கிறது என்றும், விக்ரமன் தெரிவித்த கருத்துக்கள் அதற்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது என்றும் நெட்டிசன்கள் பாசிட்டிவாக பேசிவருகிறார்கள்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

விக்ரமன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சமூகத்திற்கு தேவையான நிகழ்ச்சி என்ற பெயரையே மாற்றியுள்ளார் என்று கூற வேண்டும். ஷிவினும் இந்த பட்டியலில் இருக்கிறார். விக்ரமன் ஒரு ஜர்னலிஸ்ட் ஆகவும் ஒரு நடிகராகவும் இருந்தாலும் இவர் அரசியல்வாதி என்கிற அடையாளத்தோடு தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் விசிக கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அப்போது விக்ரமன் தமிழ்நாட்டிற்கு எப்படி தமிழ்நாடு என்கிற பெயர் வந்தது என்பது குறித்து பேசி உள்ளார். இதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

தமிழ் நாட்டுக்கு, தமிழகம் என்கிற பெயர் தான் பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் கூறியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாமலேயே... தமிழ்நாடு குறித்து விக்ரமன் பேசியிருப்பது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேபோல் இதை தெரிஞ்சு சொல்றீங்களா தெரியாம சொல்றீங்களா ? என டிடியும் நாசுக்காக கேட்டார். 

இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அகற்றக் கூடாது இயந்திர பயன்பாடு கொண்டு வர வேண்டும். அதற்கான சிந்தனையை வளரச் செய்ய வேண்டும் என்று ஒரு குறு நாடகம் மூலம் பேசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சமையல் குழுவில் முழுமையாக ஆண்களாக மாறிய போது பெண்களிடம் உங்களுக்கு சமையலறையில் இருந்து விடுதலை கிடைத்து விட்டது என்று பெண் விடுதலையை பேசியிருக்கிறார். சமூகத்தால் இன்றளவும் திருநங்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட ஷிவினின் ஆதரவு குரலாக, சரியான நேரத்திலும் ஓங்கி ஒலித்திருக்கிறார் விக்ரமன். தனக்கு கிடைத்த பிக் பாஸ் மேடையில் சமூக நீதி குறித்தும் சமூக மாற்றத்திற்கான தேவை குறித்தும் ஒவ்வொரு இடங்களிலும் தொடர்ந்து பேசியிருக்கிறார். இதுவரை எந்தவொரு நபரும் விக்ரமன் அளவுக்கு சமூக கருத்துக்களை இந்த நிகழ்ச்சியின் மூலமாக சொல்லவில்லை என்பதே உண்மை.

விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க கேட்க, சமூக வலைதளங்களில் அது ஒரு பக்கம்  பற்றி எரிகிறது. விக்ரமனுக்கு முன்பு நடிகர் ஆரி விவசாயத்தை பற்றி பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடவேண்டும். வாரம் ஒரு புத்தக பரிந்துரை என்று தனக்கான நிகழ்ச்சியாக மாற்றி உள்ளார். வார இறுதி எபிசோடுகளில் அந்தந்த நேரத்தில் ட்ரெண்டிங் டாபிக் பற்றி பேசுவது முதல் விக்ரமன், ஷிவினின் குரல்களுக்கு ஆதரவாகவும் இருந்துள்ளார் கமல் ஹாசன்.

பெரியவர்கள் முதல் 2கே கிட்ஸ் வரை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து அரசியலையும், சினிமாவையும் தனக்கே உரிய வகையில் இன்று வரை உலகநாயகன் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த சீசனில் சரியாக பயன்படுத்தியுள்ளார் என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க..2000 ஆண்டு பழமை! மழைக்காடுகளுக்கு உள்ளே புதைந்து கிடந்த மாயன் நகரம் - எங்கு இருக்கு தெரியுமா?

click me!