“அப்பா, அம்மா இரண்டு பேருமே சரக்கடிச்சிட்டு”... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்.. கட்டியணைத்து தேற்றிய ஹவுஸ் மேட்ஸ்

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 09, 2020, 04:18 PM IST
“அப்பா, அம்மா இரண்டு பேருமே சரக்கடிச்சிட்டு”... கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்.. கட்டியணைத்து தேற்றிய ஹவுஸ் மேட்ஸ்

சுருக்கம்

உடனடியாக ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் ஓடிவந்து கண்ணீர் விட்டு அழும் பாலாஜியை கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றுகின்றனர்.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருப்பவர் பாலாஜி முருகதாஸ். அவர் 2018ல் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர். இதற்கு முந்தைய வருடம் ஃபைனல் வரை சென்றாலும் ஜெயிக்காத நிலையில். 2018ல் டைட்டில் வென்றார். இருப்பினும் இவர் மீது மீடியா வெளிச்சம் அதிகம் படவில்லை. தொடர்ந்து மாடலிங் செய்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்திருக்கிறார்.

தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து தெரிவித்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன்பு பாலாஜி முருகதாஸ் தனது வாழ்க்கையைப் பற்றி கூறி கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. என் அப்பா, அம்மா பள்ளியில் சேர்த்துவிட்டதோட சரி, பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு கூட வந்தது கிடையாது. என்ன என்று எழுந்து பார்ப்பேன். அருகில் அப்பா கைகளில் கேஸ் ட்யூப் வைத்து நின்றிருப்பார். அப்போது தான் நான் உணர்வேன் அவர் என்னை அடித்திருக்கிறார் என்று. அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் போதைக்கு.. உங்களால் குழந்தையை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் குழந்தை எதற்காக பெற்றுக்கொள்கிறீர்கள்" என கூறி பாலாஜி கதறி அழுகிறார். 

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

உடனடியாக ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் ஓடிவந்து கண்ணீர் விட்டு அழும் பாலாஜியை கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றுகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் தொடர் சண்டைகளுக்கிடையே இப்படியொரு உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது பார்வையாளர்களின் மனதை பாரமாக்கியுள்ளது. இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!