
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும், பிரபலம் என்கிற அங்கீகாரத்தை பெற, ஆரம்ப காலங்களில் இருந்து எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் சொல்லும் கதையை வைத்து தான், அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் வெளிப்படையாக நடந்து வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே நடிகை ரேகா, சம்யுக்தா, கேப்ரில்லா, மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர்... நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து மற்ற போட்டியாளர்களும் இன்றுடன் தங்களுடைய கதையை கூறி முடித்த பின், பிக்பாஸ் இந்த வீட்டில் இருக்க தகுதியில்லாதவர்கள் யார் யார் என தேர்வு செய்ய சொல்கிறார்.
போட்டியாளர்கள் கலந்தோசித்த பின்னர் பதிலளித்த மாடல் அழகி சம்யுக்தா, ஆஜித், ஷிவானி, ரம்யா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய நால்வரும் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் இவர்கள் வாழ்க்கையில் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்த முடிவை சுரேஷ் ஏற்று கொண்டு என் பெயர் இந்த பட்டியலில் சேர்த்தது சரிதான் என்று கூறினார். ஆனால் முதல் வாரமே இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர் பட்டியலில் ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் இடம்பெற்று இருப்பது இவர்களின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.