
கடந்த இரண்டு சீசனை விட பிக்பாஸ் மூன்றாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே வெளியான இரண்டு ப்ரோமோக்களை தொடர்ந்து, தற்போது மூன்றாவது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் முதல் ஆளாய் சிக்கி இருப்பவர் இசை வித்வான் மோகன் வைத்தியா தான்.
இந்த ப்ரோமோவில், தன்னுடைய சங்கீத ஞானத்தை நான் வெளியே கொண்டு வரணும் என நினைப்பதாக சாண்டி கூறுகிறார். உடனே மோகன் வைத்தியாவும் அவருக்கு மமம்மம்மா என சங்கீத சொல்லித்தருகிறார்.
அவர் சொல்லி தருவதை தவறான பாடுகிறார் சாண்டி . இதை தொடர்ந்து 'உப்பு இல்லா பண்டம் அது குப்பைக்கு தான் போகுமடா" என்கிற பாடலை பாடி இது என்ன சுருதி என கேட்கிறார். முதல் நாளே நான் தான் கிடைத்தேனா என மோகன் வைத்தியா தன்னுடைய முடியை விசும்புகிறார்.
பின் எங்க வீட்டு குத்துவிளக்கே பாடலை பாடி, அவரையே குழப்புகிறார் சாண்டி. இதை வைத்து பார்க்கையில் சாண்டியின் ஆட்டத்தை விட காமெடிக்கு பிக்பாஸ் வீட்டில் பஞ்சம் இருக்காது என்பது தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.