தெலுங்கு,மலையாளம், இந்தி என்று எத்தனை மொழிகளில் நடித்தாலும் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவது ஒரு அச்சு அசல் அக்மார்க் தமிழ்ப் பையனைத்தான் என்று குழப்பமில்லாமல் பதிலளிக்கிறார் நடிகை அஞ்சலி.
தெலுங்கு,மலையாளம், இந்தி என்று எத்தனை மொழிகளில் நடித்தாலும் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவது ஒரு அச்சு அசல் அக்மார்க் தமிழ்ப் பையனைத்தான் என்று குழப்பமில்லாமல் பதிலளிக்கிறார் நடிகை அஞ்சலி.
விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் ‘சிந்துபாத்’படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அஞ்சலி,’ சிந்துபாத்தில் எனக்கு மிக இயல்பான ஒரு கதாபாத்திரம். படத்தில் விஜய் சேதுபதி சற்று காது கேளாதவராக நடித்துள்ளார். எனவே அவரை காதலிக்கும் நான் சத்தமாக பேசவேண்டும். இயல்பாகவே நான் சற்று சத்தமாக பேசுவேன். எனவே என்னை தேர்வு செய்து இருக்கிறார்கள். என்னை கடத்தி சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து 36 மணி நேரத்தில் விஜய்சேதுபதி எப்படி மீட்கிறார் என்பதே கதை.
இறைவி படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காரணம் இதன் கதைக்களம் புதிது. அவரது மகன் சூர்யா சேதுபதி துருதுருவென இருப்பான். ஆனால் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசரடிப்பான். அவன் என்னை அஞ்சலி அக்கா என்று அன்புடன் அழைப்பான்.
ஆமாம் படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் என்னை சின்ன டச்சப் கூட பண்ணவிடவில்லை. ஊரில் இருக்கும் சாதாரண பெண் போல இருக்க வேண்டும் என்று உடை, அலங்காரம் எல்லாமே சாதாரணமாக இருக்க வேண்டியதாகி விட்டது. பாடல்களில் மட்டும் வேறு உடைகளில் வருவேன்.
சமீபத்தில் என் திருமணம் குறித்த கேள்விகளை அதிகம் எதிர்கொள்கிறேன். நான் நடித்த ஹீரோக்களில் பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே.ஆனால் ஜெய் ஒருவருக்குத் தான் இன்னும் ஆகவில்லை. எப்போது பண்ணப்போகிறார் என்று தெரியவில்லை. அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேனா என்று தெரியாது. ஆனால் நிச்சயம் ஒரு தமிழ்ப்பையனைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறார் அஞ்சலி.