
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் சீசனில் வாய்ப்பு கிடைத்தும், அதனை வேண்டாம் என்று மறுத்த, நடிகர் ஒருவர் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
அதாவது நேற்று ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, போன்ற சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கவின் போட்டியாளர்களின் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே முதல் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இதுகுறித்து தொகுப்பாளர் கமல் கேட்டதற்கு, முதல் சீசனின் போது திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்ததால் அப்போது வந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும், அதனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வாய்ப்பில்லாமல் நான் எப்போதும் என்னுடைய ரூமுக்குள்ளேயே படையப்பா நீலாம்பரி போல் இருந்தேன் என கமலின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார் கவின்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.