’15 நாள் தள்ளி வாங்க பாஸ்...இல்லைன்னா போலீஸைக் கூப்பிடுவேன்’...விஜய் சேதுபதியை மிரட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்...

Published : Jun 24, 2019, 03:05 PM IST
’15 நாள் தள்ளி வாங்க பாஸ்...இல்லைன்னா போலீஸைக் கூப்பிடுவேன்’...விஜய் சேதுபதியை மிரட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்...

சுருக்கம்

பட ரிலீஸ் விவகாரங்களையும் கூட தனது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பஞ்சாயத்துபோல் எடுத்துக்கொண்டாரோ என்னவோ, ‘என் படம் ரிலீஸாகி 15 நாள் கழிச்சி உங்க ‘சிந்துபாத்’ படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இல்லைன்னா போலீஸுக்குப் போவேன்’ என்று அழாத குறையாக நடிகர் விஜய் சேதுபதிக்கு ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார் என்னம்மா லட்சுமிம்மா ராமகிருஷ்ணன்.

தொடர்ந்து மிக சுமாரான படங்களை மட்டுமே இயக்கிவரும் லட்சுமி ராமகிருஷ்ணன் லேட்டஸ்டாக இயக்கியிருக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’ வரும் 28ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. பல பஞ்சாயத்துகளை சந்தித்து மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ படமும் இதே தேதியில்தான் வர உள்ளது. இதனால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் தியேட்டர் கிடைக்காமல் அல்லது குறைவாகக் கிடைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன.இதனால் யோகி பாபுவின் தர்மபிரபு, வெற்றியின் ஜீவி, லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 இந்த நிலையில்தான், திடீரென டென்சனான  லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு தனது நிலையை விளக்கி கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் ‘பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்’ என கூறியுள்ளார்.

ஏற்கனவே ரிலீஸ் சிக்கலில் தவித்துக்கொண்டிருக்கும் ‘சிந்துபாத்’ படக்குழு, லட்சுமி ராமகிருஷ்ணனின் இப்பதிவைக் கண்டு செம காண்டாகிவிட்டார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி