பிக்பாஸ் கவினின் “லிப்ட்” படம் குறித்து வெளியான அப்டேட்... குஷியில் ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 30, 2020, 07:04 PM IST
பிக்பாஸ் கவினின் “லிப்ட்” படம் குறித்து வெளியான அப்டேட்... குஷியில் ரசிகர்கள்...!

சுருக்கம்

இந்நிலையில் படம் குறித்த சூப்பர் அப்டேட்டை கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன், மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன் பின்னர் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும்  சீரியல் அளவுக்கு வெள்ளித்திரையில் பெயர் கிடைக்கவில்லை, அதனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் தனது தவறான கேம் யுக்தியால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கவின், பின்னர், தன்னுடைய இயல்பான குணத்தையும், நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தி அனைவரின் மனங்களையும் வென்றார்.

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

 இடையே லாஸ்லியா - கவின் காதல் வேறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை உயர்த்தியது. இதனால் கவினுக்கான ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் பல ஆர்மிக்களை ஆரம்பித்தனர். பிக்பாஸ் டைட்டில் வின்னராக கவின் தான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இருந்து திடீரென வெளியேறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அதனால் ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த அன்பு அதிகரிக்க ஆரம்பித்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. முதலில் ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்க உள்ள லிப்ட் படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். கவினும், அம்ரிதாவும் ரத்தக்கறை உள்ள லிப்டில் மாட்டிக்கொண்டது போன்ற ரணகளமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது. படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்த நிலையில் ஒரே ஒரு பாட்டு மட்டுமே பாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: சிம்பிள் புடவை... தலை நிறைய மல்லிகைப்பூ... வைரலாகும் நயன்தாராவின் அடக்க ஒடுக்கமான போட்டோ...!

இந்நிலையில் படம் குறித்த சூப்பர் அப்டேட்டை கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது தற்போது தமிழக அரசு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ள நிலையில், லிப்ட் படத்திற்கான டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள அந்த ஒரு பாடலுக்கான ஷூட்டிங் பணிகளை லாக்டவுன் முடிந்த மறுகணமே கையில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!