சொந்த பட வேலையை சுறுசுறுப்பாக ஆரம்பித்த விஜய் சேதுபதி... வைரலாகும் போட்டோஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 30, 2020, 03:46 PM IST
சொந்த பட வேலையை சுறுசுறுப்பாக ஆரம்பித்த விஜய் சேதுபதி... வைரலாகும் போட்டோஸ்...!

சுருக்கம்

அதேபோல் விஜய் சேதுபதி முதன் முறையாக அரசியல்வாதி கெட்டப்பில் நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்பட வேலைகளும் லாக்டவுனுக்கு பிறகு ஆரம்பிக்க உள்ளது. இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு தொடர்ந்ததால்  படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சும்மா இருக்கும் நேரத்தில் படம் முடிந்தவரைக்கும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் ஊரடங்கில் கடந்த 4 மாதங்களாக சினிமா துறை முடங்கியுள்ளது. இதனால் பிரம்மாண்டம் முதல் சிறிய பட்ஜெட் வரை பல படங்களின் ஷூட்டிங் பாதியில் நின்று விட்ட நிலையில் பல கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. தற்போது அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து சினிமா துறையினர் ப்ரீ ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் சீரியல் படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ள  “லாபம்” படத்தின்  போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அசுர வேகத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஏற்கனவே விஜய் சேதுபதி, தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கும் மாஸ்டர் படத்தை காண வேண்டும் என ரசிகர்கள் துடியாய் துடிக்கின்றனர். மற்றொருபுறம் விருமாண்டி இயக்கத்தில் க/பெ ரணசிங்கம், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள இடம்  பொருள் ஏவல் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. 

 

இதையும் படிங்க: கவர்ச்சி ரூட்டிற்கு மாறிய ‘96’ நாயகி கெளரி கிஷன்... கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

அதேபோல் விஜய் சேதுபதி முதன் முறையாக அரசியல்வாதி கெட்டப்பில் நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்பட வேலைகளும் லாக்டவுனுக்கு பிறகு ஆரம்பிக்க உள்ளது. இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு தொடர்ந்ததால்  படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சும்மா இருக்கும் நேரத்தில் படம் முடிந்தவரைக்கும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில்  தயாராகி வரும் “லாபம்” படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி  தற்போது தொடங்கியுள்ளார்.

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

 இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஹீரோயினியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மெட்ராஸ் புகழ் கலையரசனும், வில்லனாக ஜெகபதி பாபுவும் நடித்துள்ளனர். இப்படத்தின் டப்பிங்  பணிகளில் விஜய் சேதுபதி மற்றும் கலையரசன் ஆகிய இருவரும் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரோடக்‌ஷன் மற்றும் 7 சிஎஸ் எண்டர்யின்மெண்ட் நிறுவனம் இணைந்து லாபம் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை