ட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின்! தெறிக்கவிடும் ரசிகர்கள்! இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்!

Published : Dec 07, 2019, 11:31 PM IST
ட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் கவின்! தெறிக்கவிடும் ரசிகர்கள்! இதுதான் இப்போ டிரெண்டிங் பாஸ்!

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் வேட்டையனாக அனைவருக்கும் அறிமுகமானவர் நடிகர் கவின்.   

தொடர்ந்து, 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக அறிமுகமான அவர், அதன்பின் இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 


இதில், ஆரம்பத்தில் தனது தவறான கேம் யுக்தியால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கவின், பின்னர், தன்னுடைய இயல்பான குணத்தையும், நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தி அனைவரின் மனங்களையும் வென்றார். 

நிகழ்ச்சியின் போது, கடும் எதிர்ப்புகள், நெருக்கடிகள், அவதூறு பேச்சுக்கள் என பலவற்றை சந்தித்தாலும் தன்னிலை மாறாத கவின், கடைசியில் இலங்கை பெண் லாஸ்லியா மீது தான் வைத்திருந்த அன்பை நிரூபிப்பதற்காகவே போட்டியின் இறுதிக்கட்டத்தில் வெளியேறி நிரந்தரமாக மக்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.


கவினின் இயல்பான குணத்தால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக இன்றளவும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர்.

கவின் தொடர்பான செய்தியோ, புகைப்படங்களோ வெளியானால் அதை கொண்டாடி தீர்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களாக மாறியுள்ள அவர்கள், சமூகவலைதளத்தில் அவருக்கு இருக்கும் வரவேற்பை அறிய கவின் எப்போது ட்விட்டருக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் நீண்ட நாட்களாகவே காத்திருந்தனர்.

அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில், திடீரென இன்று (டிச.7) ட்விட்டரில் மாஸ் எண்ட்ரீ கொடுத்துள்ளார் நடிகர் கவின். தனது அக்கவுண்ட்டை கடந்த 2015ம் ஆண்டே ஆரம்பித்திருந்தாலும், தற்போதுதுான் இதனை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமாக அறிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!