ஒரு படம் நடித்து வெளியாவதற்கு முன்பே மேனேஜர்.....இது டூமச் மா ஜூலி....

 
Published : Feb 03, 2018, 10:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
ஒரு படம் நடித்து வெளியாவதற்கு முன்பே மேனேஜர்.....இது டூமச் மா ஜூலி....

சுருக்கம்

big boss julie manager news

ஜல்லிக்கட்டு ஜூலி

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு மெரினா கடற்கரையில் போராடியது. கடைசியில் வெற்றியும் கண்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரையும் வெகுவாக ஈர்த்தவர் ஜூலி. தனது மிரட்டல் வசனங்களால் ஆளும் கட்சியை கிழித்து தொங்க விட்டு கொண்டிருந்தார். அவர் பேசிய வசனங்களால் வீரத்தமிழச்சி என்றும் அழைக்கப்பட்டார்.

பிக்பாஸ் ஜூலி

ஜல்லிக்கட்டில் கிடைத்த புகழ் மூலம் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் அமைதியாக ஜூலியின் போக்கு பின்னர் மாறியது. தனது சுயநலத்துக்காக சில காரியங்களை செய்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து கொண்டார். ஜல்லிக்கட்டு மூலம் வீர தமிழச்சி என்று அழைக்கப்பட்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இழந்தார்.

ஹீரோயின் ஜூலி

பிக்பாஸிலிருக்கும் போதே தனக்கு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது குழந்தைகள் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதுமட்டுமல்லாமல் விமலின் 'மன்னர் வகையறா' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் நடுவில் ஒரு அப்பள விளம்பரத்தில் தோன்றினார். இது போன்று விளம்பரங்களிலும் தொகுப்பாளனியாகவும் கலக்கிக் கொண்டிருந்த ஜூலிக்கு ஜாக்பாட் அடித்தது. ஆம். அவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அந்த படத்தில் இவருக்கு புரட்சி பெண் வேடமாம். படத்திற்கு உத்தமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேனேஜர்

இந்நிலையில், தான் நடித்துக்கொண்டிருக்கும் 'உத்தமி' படம் வெளியாவதற்கு முன்பே தனது கால்ஷீட் கவனித்துக் கொள்ள ஒரு மேனேஜரை நியமித்துள்ளாராம் ஜூலி. படமே இன்னும் வரவில்லை அதற்குள் இவ்வளவு அலப்பறையா என்று கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!