
தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தவனை சட்டை காலரை பிடித்து ஓங்கி அறைந்துள்ளார் தீபிகா படுகோனே.
ஓம் சாந்தி ஓம்
ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகவானவர் தீபிகா படுகோனே. தனது அழகாலும் அசராத நடிப்பாலும் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்துள்ளார்.
பத்மாவத்
தற்போது பல தடைகளுக்கு இவர் நடிப்பில் வெளியான பத்மாவத் படம் வெற்றி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.இந்த படத்தில் வீரமிக்க ராணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் வெளிவர கூடாது என்று தெரிவித்து பல போராட்டங்கள் நடைபெற்றன.தீபிகாவின் தலைக்கு விலையும் பேசப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தீபிகா கூறியிருப்பதாவது.
உணவகம்
எனக்கு 14 வயது இருக்கும் போது நான் என் குடும்பத்தாருடன் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு சாலையோரத்தில் நடந்து சென்றோம்.அப்பாவும் தங்கையும் முன்னால் நடந்து சென்றார்கள்.
என்னை உரசினான்
நானும் அம்மாவும் அவர்கள் பின்னால் நடந்து சென்றோம். நானும் அம்மாவும் நடந்து சென்ற போது ஒருவன் வேண்டும் என்றே என்னை உரசிக் கொண்டு சென்றான். நான் நினைத்திருந்தால் அதை கண்டு கொல்லாமல் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல் இருந்திருக்கலாம்.
ஓங்கி அறைந்தேன்
என்னை சில்மிஷம் செய்தவனை பின்னால் தொடர்ந்து சென்று அவன் சட்டை காலரை பிடித்து நடுத்தெருவில் வைத்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்.
வம்பு செய்தவனை நான் அறைந்ததை பார்த்து என் பெற்றோருக்கு இவள் பிழைத்து கொள்வாள் என்ற நம்பிக்கை வந்தது. இனி எந்த சூழ்நிலையிலும் மகள் பிழைத்துக்கொள்வாள் என்று அவர்கள் அப்போதிலிருந்தே நம்பினார்கள்.
என் பாதம் பெரியது
பத்மாவத் படம் தொடர்பாக ஒரு அமைப்பு என் மூக்கை வெட்டுவேன் என்று அறிவித்துள்ளது. எனக்கு என் மூக்கு மிகவும் பிடிக்கும். மூக்கு வேண்டாம். என் பாதம் மிகவும் பெரியதாக உள்ளது. அதை வேண்டுமானால் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறி சிரித்தார் தீபிகா.
படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் வீர பெண்மணி என்பதை நிரூபித்துள்ளார் தீபிகா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.