
நடிகர் விஜய் சேதுபதி நடித்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்' இன்று வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்திரி மற்றும் படக்குழுவினர் சமீபத்தில் தனியார் கல்லூரிக்கு சென்றிருந்தனர்.
விஜய் சேதுபதி பேச்சு:
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய காதல் அனுபவங்கள் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
முதல் காதல்:
மாணவர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் கொடுத்து வந்த விஜய் சேதுபதியிடம், அவருடைய காதல் குறித்து மாணவர்கள் கேட்டதும், முதலில் தயங்கிய இவர் 'சரி நான் சொல்லுறேன் என்று தன்னுடைய முதல் காதல் குறித்து பேச துவங்கினார்'.
என்னுடைய முதல் காதல்... 'ஒரு பெண்ணை நாலு வருஷம் காதலிச்சேன்' ஆன அந்த காதல் அந்த பெண்ணிற்கு தெரியாமலேயே போய் விட்டது என சிரித்துக்கொண்டே தன்னுடைய முதல் காதல் குறித்துப் பேசினார்.
இரண்டாவது காதல்:
இதைத்தொடந்து மற்றொரு பெண்ணின் மீதும் காதல் வந்தது. அந்த பெண் என் எதிர் வீட்டு பெண் தான். இவரிடம்மும் காதலை சொல்ல தைரியம் இல்லை அதனால் அவரை பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஒரு பையன் காதலித்து கல்யாணமும் பண்ணிக்கிட்டான் என தன்னுடைய இரண்டாவதுக் காதலை பற்றியும் கூறினார்.
மூன்றாவது:
பின் எப்படியும் காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்திலோ என்னவோ மூன்றாவதாக ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார் விஜய் சேதுபதி. மூன்றாவதாக காதலித்த பெண்ணிடம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு தன்னுடைய காதலை கூறி அவரையே திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.