“சொன்னால் மட்டும் போதாது செய்கையிலும் இருக்கனும்”... தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு பாரதிராஜா வாழ்த்து!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 01, 2020, 04:19 PM IST
“சொன்னால் மட்டும் போதாது செய்கையிலும் இருக்கனும்”... தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு பாரதிராஜா வாழ்த்து!

சுருக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல்வேறு சட்டப்போராட்டத்திற்கு பிறகு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் மூன்று அணிகள் போட்டியிட்ட நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் தோல்வியடைந்த டி.ராஜேந்தர் கள்ள ஓட்டு மற்றும் முறைகேட்டால் தான் தோல்வியுற்றதாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில், “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன். தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன.

 

இதையும் படிங்க: மனைவியை நம்பி மோசம் போன விஜய்... 15 வருஷத்துக்கு முன்னாடி சேர்த்த சொத்துக்கு ஆப்பு...!

இடைப்பட்ட காலங்களில் முடங்கிப் போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும். திரு.  முரளி இராம நாரயணன் அவர்களின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்களனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Jana Nayagan : முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் எப்போ ரிலீஸ்? அடிதூள் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்