எது உண்மை? ஆஜித் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் அர்ச்சனா..! பரபரப்பான புரோமோ..!

Published : Dec 01, 2020, 04:16 PM ISTUpdated : Dec 01, 2020, 04:17 PM IST
எது உண்மை? ஆஜித் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் அர்ச்சனா..! பரபரப்பான புரோமோ..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேறும் நிலைக்கு வந்து, பின்னர் எவிக்ஷன் ஃபிரீ பாசை வைத்து எலிமினேஷனில் இருந்து தப்பித்தவறி ஆஜித். அமைதியாகவே விளையாடி வந்த இவர், சமீப காலமாக பேசவும் துவங்கியுள்ளார்.  

பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேறும் நிலைக்கு வந்து, பின்னர் எவிக்ஷன் ஃபிரீ பாசை வைத்து எலிமினேஷனில் இருந்து தப்பித்தவறி ஆஜித். அமைதியாகவே விளையாடி வந்த இவர், சமீப காலமாக பேசவும் துவங்கியுள்ளார்.

கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க்கில் ரியோ கேட்ட கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாக பதில் கூறியதோடு டாஸ்க்கை முடித்த விதமும் ஆச்சரியமாக இருந்தது. இதற்காக ரியோவின் குரூப்பில் உள்ளவர்களே ஆஜித்தை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அர்ச்சனாவிடம் ஆஜித் கேள்வி கேட்கும் கால்சென்டர் நடைபெறுகிறது. இதில் ’இந்த கேம் ஷோவில் நீங்கள் வரும்போது ஒரு வலிமையான போட்டியாளராக வந்தீர்கள். கமல் சார் அவர்களிடம் கூட நீங்கள் பேசும்போது நான் இன்னும் என்னுடைய நக்கல்களை காட்டவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் வரும்போது உங்களிடம் நிறைய நக்கல்கள் தெரிந்தது. ஆனால் போகப் போக அது குறைந்துவிட்டது போன்று எனக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது.

மேலும் அடிக்கடி நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் டாஸ்க் எல்லாம் நான் பார்த்தவரைக்கும் நீங்கள் வேற லெவலில் செய்து வருகிறீர்கள். இப்போது என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உண்மையிலேயே வீட்டுக்கு போக வேண்டுமா? அல்லது இந்த ஷோவை வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜித் எழுப்பியுள்ளார்

ஆஜித்தின் இந்த புத்திசாலித்தனமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அர்ச்சனா திணறி வருகிறார்.

இது குறித்த புரோமோ இதோ..

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Best Cinema Fathers : தமிழ் சினிமாவின் டாப் 10 அப்பாக்கள் யார்? யார்? | Father's Day Special
Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்