
பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சன் டிவி, ப்ரோமோஷன் பணிகளை துவங்கியுள்ளது. அதன்படி, பீஸ்ட் படத்தில் இருந்து தற்போது வெளியான புதிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
மூன்று நாட்களில் பீஸ்ட் ரீலிஸ்:
விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம், பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வரும் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இப்படத்திற்காக, டிக்கெட் புக்கிங் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விஜய் -நெல்சன் கூட்டணி:
நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின், பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நட்சத்திர பட்டாளங்கள்:
இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்தின் புதிய ப்ரோமோ:
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாக இன்று இரவு 9 மணிக்கு நடிகர் விஜய் கலந்துகொண்ட பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பு ஆகிறது. மேலும் தற்போது வரை பீஸ்ட் கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இதன் முதல் நாள் காலெக்ஷன் இதுவரை வெளியான அனைத்து பட சாதனைகளையும் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இன்னும் மூன்று நாட்களில் படம் வெளியாக இருப்பதால், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ அரபிக் குத்து பாடல் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.