
நடிகை பாவனா இருநாட்களுக்கு முன் திட்டமிட்டு கடத்தப்பட்டு, ஒரு சில நபர்களால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேல் காரில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
பின் அவர்களிடமிருந்து தப்பித்து அருகே இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் லால் வீட்டில் சம்பவத்தை சொல்லி மிகவும் பதட்டத்துடன் கதறி அழுதிருக்கிறார்.
நடிகர் லால் பாவனாவுக்கு அப்பாவாக இப்போது ஹனிபீ 2 படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே தீபாவளி போன்ற படங்களில் நடித்துள்ளார் இதனால் லால் பாவனாவிற்கு முன்பே நன்கு அறிமுகமானவர்தான்.
சம்பவத்தை கேள்விப்பட்டதுமே லால் முதல் முதலில் பாவனாவின் வருங்கால கணவருக்கு போன் செய்து நள்ளிரவே வரச்சொல்லி விஷயத்தை சொல்லியிருக்கிறார். பின் போலீஸ்க்கும் தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த பாவனாவின் வருங்கால கணவர் பாவனாவுக்கு மிகுந்த ஆறுதல் கூறியிருக்கிறார். இனிதான் நீ தைரியமாக இருக்க வேண்டும். நாங்கள் உனக்கு பக்கபலமாக நான் இருக்கிறேன் என பொறுமையுடன் நம்பிக்கை கொடுத்துள்ளார்.
அதன் பின் தான் பாவனா சகஜமாகியுள்ளார். மேலும் இனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தாலும் கூச்சப்படாமல் நடந்த நிகழ்வுக்களை கூறி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என நம்பிக்கை வார்த்தைகள் கூறினாராம். பின் தான் பாவனா சமாதானம் ஆகினாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.