
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பாவனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்க பட்ட சம்பவம் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் பாதிக்கப்பட்ட பாவனாவே கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளியை கண்டுபிடித்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டு குற்றவாளிகள் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் நடிகர் திலீப் இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திலீப், மஞ்சு வாரியரின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக கிசுகிசுக்க பட்டவர் பாவனா தான்.
காரணம் திலீப், காவ்யா கவியமாதவனுக்குள் இருந்த தொடர்பை மஞ்சுவாரியரிடம் வெட்ட வெளிச்சமாகியவர் பாவனா தான் . இதன் காரணமாகவே இருவரும் பிரிந்தனர் என்பது பலருக்கும் தெரியும்.
இதற்கு பழிவாங்குவதற்கும் இதுபோல் சில விஷயங்களை மனதில் வைத்தும் தான் திலீப் இப்படி பாவனாவை அவரது கார் டிரைவர் வைத்து இதுபோன்ற செயலை செய்துவிட்டார் என சொல்லப்படுகிறது.
அதோடு குற்றவாளிகளாக கூறப்படுபவர்களுக்கு திலீப் ரூ. 30 லட்சம் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்தும் தற்போது போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பாவனாவிற்கு ஆதரவாக பல மலையாள நடிகர்கள் ஒன்றாக இணைந்தும், அதில் திலீப் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோர் பங்கு பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.