
பல விளையாட்டு வீரர்கள் சினிமா துறையிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர், ரித்திகா சிங் போன்ற வீராங்களைகள் தற்போது கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சினிமாத்துறையில் உள்ள ஒரு நடிகை விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பல வருடமாக தொகுத்து வழங்கி வரும் ரம்யா, என்பது
சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரம்யா கூறியதாவது, பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.
போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளேன்' என்று ரம்யா கூறியுள்ளார்.
இவர் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கு பெற்று.... பதக்கங்கள் பெற நியூஸ் பாஸ்ட் சார்பாக வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.