
நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டில் நடந்து வரும் முக்கிய நிகழ்வுகளுக்கு தன்னுடைய வலைத்தளம் மூலம் கருத்து கூறி வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசன் கூறும் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர் பதில் கொடுத்து வருவதன் மூலம் இருவருக்கும் பெரும் போராட்டமே நடந்து வருகிறது.
ஏற்கனவே ஒரு முறை கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது, 'முதல்வர் ஓபிஎஸ் போராட்டக்காரர்களை நேரில் சந்திக்க வேண்டும்' என்று கூறிய கருத்துக்கு 'இது முட்டாள்தனமான கருத்து' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதும் அதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்ததையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது மீண்டும் கமலை வம்புக்கு இழுத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி' அவர் இப்போது கமல் குறித்து கூறியபோது, 'கமல்ஹாசன் முதுகெலும்பு இல்லாதவர் போல் கருத்து கூறுவதாக கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கமல்ஹாசன், 'கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு எலும்பு எனக்கு உள்ளது. அதுவே தனக்கு போடும் . சுப்ரமணியன் சாமி தமிழர்களை பொறுக்கிகள் என அழைத்து வருகிறார். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவசியமில்லை. மக்கள் பார்த்துக் கொள்வார்கள்' என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.