'தங்கலான்' படப்பிடிப்பு ஒகேனக்கல் அருகில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இயக்குனர் மற்றும் படக்குழுவினரோடு தண்ணீரில் குளித்து அட்டகாசம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம்.
'பொன்னியின் செல்வன்' பட வெற்றிக்கு பின்னர், நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை பற்றி பலரும் அறிந்திடாத பக்கங்களை இந்த படம் மூலம் இயக்குனர் பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு காட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல்... மிக நீண்ட தாடி, நீளமான முடி என இதுவரை எந்த படத்திலும் நடித்திராத தோற்றத்திற்கு மாறியுள்ளார் விக்ரம் என்பது சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் இருந்தே தெரிந்தது. மிகவும் விறுவிறுப்பாக காடு மற்றும் மலை சார்ந்த இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வரும் நிலையில், 'தங்கலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் பசுபதி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை, ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு, குறித்தும்... படப்பிடிப்பு முடிந்து தண்ணீரில் படக்குழுவினரோடு நீராடும் வீடியோ ஒன்றை நடிகர் விக்ரம் வெளியிட அந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து போட்டுள்ள பதிவில், "இன்று ஒகேனக்கல் அருகில் #Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம். என கூறி கூறியுள்ளார்.
இன்று ஒகேனக்கல் அருகில் படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம். pic.twitter.com/6NCiU6ezGQ
— Vikram (@chiyaan)