
பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரபாகும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் சற்றும் எதிர்பாராத பல திருப்பங்கள் தினம் தோறும் அரங்கேறி வருகிறது. அதில் ஒன்று தான் நேற்றைய தினம் நடிகர் பரணி தன்னை விட்டால் மட்டும் போதும் என ஓடிபோனது.
அப்படி போகும் சில மணி நேரங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டை விட்டு தப்பிக்கவும் முயற்சி செய்தார். அப்போது மனக்குமுறல் தாங்காமல் தன்னை எல்லாரும் தாப்பா பாக்குறாங்க அதை என்னால் தாங்க முடியவில்லை என கண் கலங்கியபடியே பிக் பாஸ்ஸிடம் கூறினார்.
பின், பிக் பாஸ் குரல் சமாதானம் பேசி அவரை கிழே இறங்க வைத்தது. இதை தொடர்ந்து பரணியை எதிரியாக பார்பவர்களில் ஒருவரான, வையாபுரியிடம் பேசிய அவர்... அண்ணா இங்க இருக்குற எல்லாரையும் அக்கா தங்கையாகத்தான் நான் பார்க்கிறேன் பின் எப்படி நான் தவறாக யோசிப்பேன் என கூனி குறுகியபடி கூறினார்.
மேலும் கடவுள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன் நான் சொன்னா அது பளிச்சிடும் அண்ணா... நான் சொன்னதால தான் கஞ்சா கருப்பு அண்ணா வெளியில போய்ட்டாரா என்று கூட வருத்தப்பட்டது இருக்கேன் என்று கூறி நான் "மழை பேய்னா பெய்யுற" வம்சத்துல பிறந்தவன் என்றும் கூறுகிறார்.
பிக் பாஸ் ஆண்மகன்கள் அனைவரும் கூடி நமிதாவின் அரை குறை ஆடை பற்றி பேசியபோது... பரணி மட்டும் தான் அவரது ஆடையை பற்றி பேசாமல் இருந்தார்... இதில் இருந்து கெட்டவர்களை எல்லாம் நல்லவர்களாக பார்க்கிறார்கள் நல்லவர்களை கெட்டவர்களாக பார்க்கிறார்கள் என தெளிவாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.