
பிக் பாஸ் நிகச்சியில் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஒரு ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதுதான்.
ஏற்கனவே கஞ்சக்கருப்பை வெளியேற்றியதால், கோபத்தில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பரணியை தாறுமாறாக பேசி அவரை எப்படி வெளியேற்றுவது என்பதை மட்டுமே யோசித்தனர்.
இதற்காக காயத்திரி ரகுராம் அனைவரையும் கூடி இது பற்றி கலந்தாலோசித்தார் அப்போது பேசிய அவர் ஒரு பெண்ணாக கருப்பு அண்ணன் இல்லாத வீட்டில், பரணியோடு இருப்பது பாதுகாப்பு என்று நான் உத்தரவாதம் தர மாட்டேன் என கூறினார்.
மேலும் ஏற்கனவே கருப்பு அண்ணன் தான் கெட்ட பழக்கங்கள் இருந்த பரணியை அடக்கி வைத்திருந்தார். அதனால் நான் என்ன முடிவு செய்துள்ளேன் எனறால் பரணி இங்கே இருந்தால், நான் இங்க இருக்க பயமா இருக்கிறது என்று சொல்லப்போகிறேன் என்றும் சக போட்டியாளர்களிடம் மன்னிச்சிடுங்க நான் இங்கு இருக்க விரும்பவில்லை... தலைவியாக என்னால் இந்த பிரச்னையை கையால முடியாது என்று தெரிவிக்கிறார்.
இவருடைய பயத்தை போக்க... நடிகர் கணேஷ் வெங்கட் ராம், பெண்கள் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு என கூறுகிறார், அதற்கு நமிதா தனிப்பட்ட முறையில் என்ன பாதுகாத்துக்கொள்ள தன்னால் முடியும் ஆனால் தற்போது அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதுபோல் தெரிகிறது என்றும் கூறுகிறார்.
இந்த கும்பலில் ஜூலியும் அவர் மீது குறை கூறி கும்மியடித்தார். மொத்தத்தில் அனைவரும் பரணியை பற்றி மிகவும் அசிங்கமாக சித்தரித்து பேசி அவரை கேவலப்படுத்தினார்கள். அசிங்கமாக பேசி வந்த கஞ்சாக்கருப்புவை மிகவும் உயர்வாக பேசி ஒரு வழியாக பரணியை துரத்திவிட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.