பரணியை பழித்து பேசி மட்டம் தட்டிய ஹோம் மேட்ஸ்...

Asianet News Tamil  
Published : Jul 11, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
பரணியை பழித்து பேசி மட்டம் தட்டிய ஹோம் மேட்ஸ்...

சுருக்கம்

homemades against barani

பிஸ் பாஸ் ஹோம் மேட்ஸ் அனைவரும் நடிகர் பரணிதான் இந்த வாரம் வெளியேற்ற படுவார் என பெரிதும் எதிர்பார்த்தனர் ஆனால் பரணியையும் , ஓவியாவையும் காப்பாற்ற மாட்டும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ஓட்டுகள் வந்ததாக உலக நாயகன் கமலஹாசன் அறிவித்தார்.

அதே போல கஞ்சா கறுப்பிற்கு வெறும் 15 லட்சம் ஓட்டுகள் மட்டுமே வந்ததாக கூறி வெளியேற்ற பட்டார்.

இந்நிலையில், பரணியை பார்த்து கமலஹாசன் உங்களை காப்பாற்ற இத்தனை பேர் வாக்களித்துள்ளனர். இதனை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்ட போது.... பரணி செய்கைகள் மூலம் வாய்அடைத்து போய் அதிர்ச்சியில் தான் பதில் சொன்னார். மேலும் நான் பல லட்சம் மக்களை பார்க்கிறேன் எங்கு சென்றாலும் நான் நடந்து செல்வதால் அது சாத்தியம் என்பது போல பதிலளித்தார்.

ஆனால் எப்படியும் பரணி வெளியேற்றப்படுவார் என பெரிதும் எதிர்பார்த்த அனைவருடைய கோபமும், ஓட்டுமொத்தமாக பரணிமேல் திரும்பியதால் அனைவரும் அவரை ஒதுக்க ஆரமித்தனர். ஒருவர் கூட அவரிடம் முகம் கொடுத்து  பேசவில்லை.

மேலும் அவர் கமலஹாசன் முன் நடித்தார் என ஆர்த்தி கூறினார் பரணி செய்தது போல செய்தும் காட்டி பழித்தார், அதே போல வையாபுரியும் பரணி எப்படி செய்தாரோ அதே போல செய்து காண்பித்து பரணி மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இப்படி பல வேலைகள் செய்தாலும், பலரும் தற்போது வரை பரணிக்கு தான் சப்போர்ட் செய்து வருகிறார்களே தவிர மற்றவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தான் உண்மை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அன்று ரஜினி, கமல் வந்தப்போ காத்துவாங்கிய மலேசியா ஸ்டேடியம்... இன்று ஹவுஸ்ஃபுல் ஆக்கி மாஸ் காட்டிய விஜய்!
பிக் பாஸ் வச்சாரு பாரு ட்விஸ்ட்... இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?