பன்னீர் செல்வத்தை சந்திக்கும் பாக்யராஜ் - பெருகும் திரையுலகினர் ஆதரவு...!!!

 
Published : Feb 08, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பன்னீர் செல்வத்தை சந்திக்கும் பாக்யராஜ் - பெருகும் திரையுலகினர் ஆதரவு...!!!

சுருக்கம்

இயக்குனர் திலகம் திரைக்கதை மன்னன் என பல பட்டங்களுக்கு  சொந்தக்காரர் ஆன கே.பாக்யராஜ், 70வது மற்றும்  80பது களில் முன்னணி  இயக்குனராக வலம் வந்த இயக்குனர் பாக்யராஜ் புரட்சி தலைவர் எம்.ஜி .ஆரின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட பல் வேறு அரசியல் சூழல் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கிய இவர் 'எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்கிற கட்சியையும் தொடங்கினர்.

அதன் பின்னர் அந்த  கட்சியை கலைத்த  பாக்கியராஜ் சில காலம் கழித்து திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் மீண்டும் அரசியலை விட்டு ஒதுங்கிய அவர் திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

சில வருடங்கள் கழித்து அதிமுகவில் இணைய வேண்டி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க பல முறை தொடர்புகொண்டும் அது முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழல் பல திருப்பங்களை நாள் தோறும் ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரபபன சூழ்நிலையில் சசிகலாவிற்கு  எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள  முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து நேரில் சந்திப்பது, அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ