விஷாலை வெறுப்பேற்றி மிரளவைத்த பாகுபலி 2! ஸ்டிரைக் வாபஸ் பின்னணி இதுதான் ப்ரோ!

 
Published : May 23, 2017, 09:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
விஷாலை வெறுப்பேற்றி மிரளவைத்த பாகுபலி 2! ஸ்டிரைக் வாபஸ் பின்னணி இதுதான் ப்ரோ!

சுருக்கம்

bahubali make vishal withdraw protest

சினிமா மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது, திருட்டு வி.சி.டி. ஒழிப்பு படையில் அதிக நபர்களை இணைப்பது...உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30_ம் தேதி முதல் சினிமாத்துறை சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தார் விஷால். இந்த முடிவை அத்துறை சம்பந்தப்பட்ட சில அமைப்புகளை கூட்டித்தான் எடுத்தார்.

ஆனாலும் அறிவிப்பு வெளி வந்த பிறகு தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் தரப்பிலிருந்து இந்த ஸ்டிரைக் அறிவிப்புக்கு எதிரான கொந்தளிப்புகள் கொளுந்துவிட்டு எரிய துவங்கின. 

குறிப்பாக மேற்கு மண்டல தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் விஷாலை வெளுத்து வாங்கிவிட்டார் மீடியாவில். ‘’கபாலி படத்தை வாங்கி நாற்பது சதவீதத்துக்கும் மேலே எங்களுக்கு நஷ்டமாகிடுச்சு.

விளம்பரம் செஞ்ச அளவுக்கு அந்த படம் ஓடலை. ரஜினி ரஜினின்னு நம்பி வாங்குன தியேட்டர்க்காரங்க எல்லாம் கையை சுட்டுக்கிட்டாங்க. கபாலியால நாங்க பலியாகி கிடந்தோம். 

இந்த நிலையிலதான் பாகுபலி 2 வந்து எங்களை கைதூக்கி விட்டிருக்குது. தியேட்டர்கள்ள அடைமழை வசூல். பல நாட்களாகியும் டெம்பர் குறையாம நின்னு வசூல் அள்ளுது. வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் உரிமையாளர்கள்ள ஆரம்பிச்சு பாப்கார்ன் விக்குற பையன் வரைக்கும் அத்தனை பேரும் ஹேப்பி அண்ணாச்சி!

படம்னா இப்படித்தான்யா இருக்கணும். வெற்றின்னா இதுதான். வெற்றிவிழா கொண்டாட தகுந்த படம் இதுதான். இதை விட்டுப்போட்டு நம்மாளுங்களும் பெரிய ஹீரோக்கு பின்னாடி போயி பெருமைக்கு படம் எடுக்கிறாங்க. இவங்களோட படத்தை வாங்கி, திரையிட்டு நாங்களும் கையை சுட்டுக்கிறோம். 

பாகுபலி இன்னும் பல நாட்கள் வசூலை அள்ளித்தட்ட போகுது. அதனால மே 30_ம் தேதி தியேட்டர்களை நிச்சயமா மூடமாட்டோம்.” என்று விஷால் தம்பி வேற வேலை இருந்தா பாருங்க...என்கிற லெவலுக்கு இறங்கியடித்துவிட்டார். 
சுப்பிரமணியத்தை பார்த்து பல மண்டலங்கள், மாவட்டங்களில் இருந்து தியேட்டர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் எதிர் குரல் கொடுத்ததால் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கும் முடிவுக்கு வந்தார் விஷால். 

கடந்த 21_ம் தேதியன்று திரைப்பட வர்த்தக சபையில் அவசர கூட்டத்தை கூட்டி பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரோடு அமர்ந்த விஷால் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரோடு ஆலோசனை நடத்தி, ஸ்டிரைக் வாபஸ் முடிவை அறிவித்தார்.

‘ஸ்டிரைக் நடந்தால், தணிக்கை முடிந்து வரிவிலக்குகள் பெற்று ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கும் புதிய படங்கள் காலம் தள்ளிப்போகும். இதனால் ஜூலையில் அமலாகும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை இந்த படங்கள் ஏற்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே இந்த ஸ்டிரைக் வாபஸ் வாங்கப்படுகிறது.” என்று சில காரணமும் கூறினார். 

ஆனால் இந்த ஸ்டிரைக்கை வாபஸ் வாங்க வைத்ததே பாகுபலி 2 கொட்டிக் கொட்டிக் கொடுக்கும் வசூல்தான் என்பதில் விஷால் உள்ளிட்ட ஒட்டுமொத்த டீமும் செம அப்செட். தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக வந்து அமர்ந்த ஜோரில் காலவரையற்ற ஸ்டிரைக்க நடத்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்வுக்கு ஆளாக்கலாம் என்று விஷால் போட்டு வைத்திருந்த திட்டம் பணால் ஆனதில் அவருக்கு செம கடுப்பு.

ஆனாலும் பாகுபலியின் வசூல் வீச்சால் தியேட்டர் உரிமையாளர்கள் துணிந்து நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் எதிர்ப்பதும், விமர்சிப்பதும் விஷால் உள்ளிட்டோருக்கு மிரட்சியை தந்துள்ளது. 

இந்த விமர்சன பூனைகளுக்கு மணி கட்டும் திட்டத்தை அடுத்தடுத்த கூட்டங்களில் எடுக்க விஷால் டீம் முடிவு செய்துள்ளது. கபாலி வசூலை வைத்து தன்னை ரொம்பவே தியேட்டர் உரிமையாளர்கள் காவு வாங்குவதால், கலைப்புலி தாணுவும் இந்த விஷயத்தில் விஷாலுடன் போனால் போகிறதென்று கைகோர்த்திருக்கிறார். 

அதேநேரத்தில் இவர்களின் நடவடிக்கைகளை தெளிவாக வாட்ச் செய்யும் தியேட்டர் உரிமையாளர்கள் ‘சினிமா வெற்றி, தயாரிப்பாளர்களை பற்றி விமர்சன்ம போன்றவற்றை வைத்து இப்படியிப்படித்தான் பேட்டி கொடுக்க வேண்டும் என்று ஒருவேளை விஷால் டீம் தங்களுக்கு விதிமுறைகள் போடுவார்களேயானால் அதையும் ’வெச்சு செய்வது’ என்று இப்போதே முடிவெடுத்துவிட்டனர்.’
ஆக மொத்தத்தில் பாகுபலி க்ளைமாக்ஸை விட இவங்க மோதல் செம்ம பரபரப்பா இருக்கும் போலிருக்கேடா நாராயணா!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!