
பாகுபலி 2 பல்வேறு எதிர்பார்ப்புகள், பிரச்சனைகளை சமாளித்து நேற்று உலகம் முழுக்க வெற்றிகரமாக திரையிடப்பட்டது.
சிறந்த படத்திற்கு கூட ஏடாகூடமான விமர்சனங்களை தரும் ஒரு சில ஊடகங்கள் கூட இதுவரை நல்ல விமர்சனங்களையும், வசூலையும் அள்ளி தந்துகொண்டிருக்கிறது பாகுபலி 2 என கூறியுள்ளனர்.
இப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ள இந்த திரைப்படத்தின் கதையை எழுதியவர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்.
தற்போது வெளியாகியுள்ள அப்படத்தின் முன் கதை "சிவகாமி பர்வதம்"என்னும் நாவலில் இருந்து வெளியாகியுள்ளது. இதை பிரபல ஹிந்தி எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதியுள்ளார்.
நாவலின் படி சிவகாமியின் சிறு வயதில் அவரது அப்பாவை பொய் பழி சுமத்தி கொன்றுவிடுவாராம் மகிழ்மதியின் அரசன்.
மனதில் வெறிவைத்து பின்னாளில் தன் அப்பா தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்து, மகிழ்மதியை வென்று மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அரசியாக அரியாசனம் பிடிப்பாராம்.
இதன் பின் தான் பாகுபலி கதை தொடங்குகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.