சர்ச்சையை ஏற்படுத்திய 'பேட் கேர்ள்' படத்திற்கு NETPAC சர்வதேச விருது!

Published : Feb 08, 2025, 04:06 PM IST
சர்ச்சையை ஏற்படுத்திய 'பேட் கேர்ள்' படத்திற்கு NETPAC சர்வதேச விருது!

சுருக்கம்

பிராமணர்களை இழிவு படுத்தும் விதமாக 'பேட் கேர்ள்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு IFFR 2025 இல் மதிப்புமிக்க NETPAC விருதை கிடைத்துள்ளது.  

இயக்குனர் வெற்றி மாறனின் துணை இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் 'பேட் கேர்ள்'. இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், அதிக அளவிலான விமர்சனங்களுக்கு ஆளானது. ஒரு தரப்பினர் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வந்த போதிலும், மற்றொரு தரப்பு பிராமணர்களை அவமதிக்கும் விதமாகவே இந்த படத்தில், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி வந்தனர்.

அதே போல் இந்த படத்தின் இயக்குனர் வர்ஷா பரத், டீசர் வெளியீட்டு விழாவில் பெண்கள் என்றால் பத்தினியாக தான் இருக்க வேண்டுமா என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர்களான வெற்றி மாறன், அனுராக் காஷ்யாப் என அனைவரையும் நெட்டிசன்கள் வசைபாடி வந்தனர். 

கார்த்தியால் ராஜராஜன் எடுத்த முடிவு; மாயாவுக்கு செக்மேட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

இந்த திரைப்படம் படத்திற்காக தற்போது இயக்குனர் வர்ஷா பரத் நெதர்லாந்து - ரோட்டர்டாம், சர்வதேச திரைப்பட விழா விழாவில் (IFFR) 2025 இல் NETPAC விருதை வென்றுள்ளார்.  நெட்பேக் விருது, ஆண்டுதோறும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களிலிருந்து ஒரு தனித்துவமான திரைப்படத்திற்கு வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிக்கும் விதத்தில் வழங்கப்படுகிறது.  இயக்குனர்களின் முதல் மற்றும் இரண்டாவது படங்களை மட்டுமே ஊக்குவிக்கும் நோக்கத்தில் வழங்கப்படும் இந்த விருதை தற்போது வர்ஷா பரத் பெற்றுள்ளார்.

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் வழங்க, கிராஸ் ரூட் திரைப்பட நிறுவனம் 'பேட் கேர்ள்' படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில்  துணிச்சலான நடிப்பை அஞ்சலி சிவராமன் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த படத்தில் சாந்தி பிரியா, ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிபள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரீத்தா ஜெயராமன் (ISC), ஜெகதீஸ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கிடைத்துள்ள NETPAC விருது குறித்து படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?