
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பல படங்கள், தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்துள்ள நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன்' படத்தையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர், இயக்குனர் ஷங்கர் எடுக்க திட்டமிட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக முடிவடையாமல் சென்று கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வந்த போது,நடிகர் கமலஹாசனுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி, கிரேன் விழுந்து விபத்து, கொரோனா பிரச்சனை போன்ற அடுத்தடுத்து காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றது. ஒரு நிலையில் இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அடுத்ததாக தான் இயக்க திட்டமிட்ட ராம் சரணின் 15 வது படத்தை இயக்க சென்றார்.
'இந்தியன் 2' படத்தில் மிகப்பெரிய தொகையை செலவு செய்த லைகா நிறுவனம், இப்படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் மற்ற படத்தை இயக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு வழியாக லைகா தரப்புக்கும், இயக்குனர் ஷங்கர் தரப்புக்கும் சமாதான பேச்சுவார்த்தை நடந்து சுமூக முடிவை எட்டிய நிலையில், மீண்டும் இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். மேலும் ஒரே நேரத்தில் ராம் சரணின் படத்தையும், கமல்ஹாசன் படத்தையும் இயக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
ராம் சாரணை வைத்து இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வந்த நிலையில், 'இந்தியன் 2' படப்பிடிப்புக்கு கமலஹாசன் கால்ஷீட் கிடைக்காததால் தாமதமாகி கொண்டே சென்றது. இந்நிலையில் இந்தியன் 2 படபிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். மேலும் குறித்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு 'பேக் ஆன் செட்ஸ்' என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் பரபரப்பான துவக்கத்துடன் ஆரம்பமாகி உள்ளது தெரிகிறது. எனவே எப்படியும் இந்த ஆண்டு இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.